விடிய விடிய பேசும் பா.ம.க., மண்டை காயும் பா.ஜ.,
பா.ம.க., நிறுவனர் ராமதாசை நேற்று முன்தினம்நள்ளிரவு சந்தித்த பா.ஜ., முக்கிய தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தியதாக தகவல்வெளியாகியுள்ளது.
சென்னையில் தங்கியிருந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நேற்று முன்தினம் நள்ளிரவில் பா.ஜ., முக்கியத் தலைவர்கள் இருவரையும் வரவழைத்து பேசினார். அப்போது பா.ஜ.,வுடன் கூட்டணி சேர தன் விருப்பத்தை தெரிவித்த ராமதாஸ், பா.ம.க.,வுக்கு உரிய முக்கியத்துவம் வேண்டும். ராஜ்யசபா சீட், மத்திய அமைச்சர் பதவி போன்ற சில கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கூட்டணியை விரைந்து முடிக்காமல் விடியவிடிய பேசும் பா.ம.க.வினர் போக்கால் மண்டை காய்ந்துள்ளது தமிழக பா.ஜ.
பா.ம.க., - தே.மு.தி.க., கூட்டணி உறுதியாகி விட்டால் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோருடன் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் ராமதாசை சந்திப்பர் என, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து