ராஜாவுக்கு விளம்பர மோகம் அமைச்சர் முருகன் தாக்கு

ராஜ்யசபா உறுப்பினராக, இரண்டாவது முறையாக மத்திய இணை அமைச்சர் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதன்முறையாக நீலகிரி தொகுதிக்கு நேற்று வந்தார். அன்னுாரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது :
மக்கள், ஜெய் ஸ்ரீராம் என்று கூறுகின்றனர். ஆனால், இந்த தொகுதி எம்.பி., ராஜாவோ ராமபிரானுக்கு எதிராகவும், மக்களின் இறை நம்பிக்கையையும், பட்டியலின மக்களை கொச்சைப்படுத்தியும் பேசி வருகிறார். எம்.பி.,யாக நீலகிரி தொகுதியில் எந்த பணியும் செய்யவில்லை. தொகுதியை மேம்படுத்தவில்லை.
விளம்பர மோகத்தில், ஹிந்து தெய்வங்களை, ஹிந்து கலாசாரத்தை இழிவுபடுத்தி பேசி வருகிறார். தொகுதி மக்கள் நீலகிரி எம்.பி., ராஜா மீது கடும் கோபத்தில் உள்ளனர். நீலகிரி மக்கள் அவரை தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து