பா.ஜ.,வுடன் நல்ல நட்பில் இருக்கிறோம் : பிரேமலதா
''பா.ஜ.,வுடன் எந்த திரைமறைவும் எங்களுக்கு கிடையாது, அவர்களும் எங்களுடன் நல்ல நட்பில் உள்ளனர்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
இது குறித்து பிரேமலதா கூறியதாவது:
கூட்டணி குறித்து இரண்டாம் கட்ட பேச்சுக்காக எஙகள் கட்சி சார்பில் தேர்தல் குழு உறுப்பினர்கள் அ.தி.மு.க., அலுவலகத்தில் பேச்சு நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த செய்தி ஒரு வாரத்திற்குள் தெரியப்படுத்தப்படும். சமூக ஊடகங்களில் ராஜ்யசபா சீட் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் எங்களுக்கும் உறுப்பினர்கள் வேண்டும் என கேட்டுள்ளோம். அ.தி.மு.க., சார்பில் இரண்டாம் கட்ட பேச்சு இன்று நடந்துள்ளது. தே.மு.தி.க.,வின் உறுதியான நிலைபாடு குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.
எங்களின் நிலைப்பாட்டையும் ராஜ்யசபா சீட் தர வேண்டும் என அ.தி.மு.க.,விடம் வலியுறுத்தி உள்ளோம். நல்ல செய்தி வரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.,வுடன் எந்த திரைமறைவும் எங்களுக்கு கிடையாது, அவர்களும் எங்களுடன் நல்ல நட்பில் உள்ளனர். எங்கள் கட்சிக்கு எது நன்மையோ அதை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து