அரசு விழாவில் ஓட்டு கேட்ட அமைச்சர்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் புதிய பஸ்கள் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், அரசு விழா என்றும் பாராமல் கட்சிக் கூட்டம் போல் பிரசாரத்தை துவங்கி விட்டார்.
அவர் பேசுகையில், ''தி.மு.க., ஆட்சியில் தான் அரசு போக்குவரத்து கழகம் புத்துயிர் பெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து கழகம் சீரழிந்துவிட்டது. நீலகிரி லோக்சபா தொகுதியில் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜா போட்டியிடுகிறார்; மறக்காமல் தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வேண்டும்,'' என, ஓட்டு கேட்டார்.
'இது அரசு விழா என்பது கூட நினைவில் இல்லாமல், அரசு அதிகாரிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு, இப்படியா பகிரங்கமாக ஓட்டு கேட்பார்?'என அரசு ஊழியர்கள் அங்கலாய்க்கின்றனர்.
இதற்கிடையில், அரசு விழாவை தேர்தல் பிரசாரக் களமாக்கிய அமைச்சர் ராமச்சந்திரன் மீது, தேர்தல் கமிஷனில் ஆதாரங்களுடன் புகார் கொடுக்க தயாராகி வருகிறது அ.தி.மு.க.,
வாசகர் கருத்து