பா.ஜ.,விடம் திருப்பூர் கேட்கும் ஹிந்து முன்னணி
திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு லோக்சபா தொகுதிகளில் ஹிந்து முன்னணி அமைப்பின் நுாற்றுக்கணக்கான கிளைகள் உள்ளன.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகன் தங்கராஜ், பல்லடம் தொகுதியில் 13,127 ஓட்டுகள் பெற்றார். தற்போது பா.ஜ.,வில் இருக்கும் மகன் தங்கராஜை, திருப்பூரில் களமிறக்க திட்டமிட்டுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம் இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலர் கேசவ விநாயகம் ஆகியோரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 1996ல் ஹிந்து முன்னணியில் இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலிலும், 1998ல் ஆர்.எஸ்.எஸ்., திருப்பூர் மாவட்டத் தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியிலும், 2014ல் ஆர்.எஸ்.எஸ்., மாநிலத் தலைவராக இருந்த குப்புராமு ராமநாதபுரம் தொகுதியிலும் நிறுத்தப்பட்டனர்.
அதுபோல, வரும் லோக்சபா தேர்தலிலும் சங் பரிவார் அமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலரை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து