பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை : பட்டியலுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை
"லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தேசிய தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வழங்க உள்ளோம்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் தமிழக பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து தொகுதிவாரியாக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.,வின் தலைமையகமான கமலாலயத்தில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்துக்குப் பின் அண்ணாமலை கூறியதாவது:
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பா.ஜ., நிர்வாகிகள் சென்று தொண்டர்களிடம் ஆலோசனைகளை பெற்றனர். யார் போட்டியிட வேண்டும் என்ற விவரத்தை தொண்டர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தப் பட்டியலில் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலுடன் பா.ஜ.,வின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் இன்று டெல்லி செல்கிறோம். தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் யார் போட்டியிடுவது என்ற விவரத்தை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் வழங்க உள்ளோம். நாங்கள் டெல்லியில் இருந்து திரும்பும் போது பா.ஜ., வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகலாம்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
வாசகர் கருத்து