பா.ஜ.,வில் இணையும் கொல்கத்தா முன்னாள் நீதிபதி!
கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர், அபிஜித் கங்கோபாத்யாய். ஆசிரியர் தேர்வு முறைகேடுகள் தொடர்பான குற்றங்களுக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரனைக்கு உத்தரவிடுவது உள்பட பல அதிரடி தீர்ப்புகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 4) தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு அனுப்பியுள்ளார். இதன் நகலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சிவஞானம் ஆகியோருக்கு அபிஜித் அனுப்பியுள்ளார்.
நீதிபதி பதவியில் இருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாய், வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வில் இணைந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
வாசகர் கருத்து