Advertisement

ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் போட்டியா : காங்., தலைவர் அடித்த பல்டி

தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார், மதுரவாயல், அம்பத்துார் ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளை அடக்கிய, , ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் இம் முறை, டி.ஆர்.பாலுவுக்கே மீண்டும் சீட் என்ற தகவல் உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், 'ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் இம்முறை ராகுல் போட்டியிட வேண்டும்' என, தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தாம்பரத்தில் நேற்று முன் தினம் நடந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு வடக்கு மற்றும் தெற்குமாவட்டங்களின்செயல் வீரர்கள் கூட்டத்திலும், தமி ழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகையும், இதை உறுதி செய்துள்ளார்.

அவர் பேசியதாவது:

கடந்த முறை ராகுல், கேரளா வயநாடில் நின்று வெற்றி பெற்றார். இம்முறை, அவரது தந் தையின் ஆன்மா இருக்கும் இடமான, ஸ்ரீபெரும்புதுாரில் போட்டியிட வேண்டும் என, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றனர். இதை ராகுல் பரிசீலிப்பார். ராகுல் நிற்பதாக முடிவு செய் ஸ்ரீபெரும்புதுவிட்டால், தி.மு.க.,வே வரவேற்கும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

சில நாட்களுக்கு முன், ஒரு கூட்டத்தில் காங்., தலைவா செல்வப்பெருந்தகை பங்கேற்றார். அப்போது அவர், 'டி. ஆர்.பாலுவை, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்' என. ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் யார் நிறுத்தப்படுவார் என சூசகமாக பேசியிருந்தார்.

இப்போது, ராகுலை நிற்க வைக்க விரும்புவதாக, திடீர் பல்டி அடித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்