முரண்பாட்டின் மொத்த வடிவம், 'இண்டியா' கூட்டணி: ஜி.கே.வாசன்
''பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்,'' என தா.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக பா.ஜ ., தா.மா.கா., இடையேயான பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. பா.ஜ., தேர்தல் குழு சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்.,கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தா.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து நேரில் சந்தித்து கூட்டணி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின் ஜி.கே.வாசன் கூறியதாவது:
பா.ஜ., த.மா. கா., இடையேயான இந்த முதல் சந்திப்பு ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல், களப்பணி, வெற்றி வியூகம் குறித்து இந்த சந்திப்பில் பேசியுள்ளோம். எங்கள் தேர்தல் குழு அமைத்தபின் முறைப்படி தொகுதி எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படும்.
தா.மா.கா.,வில் போட்டியிட விரும்புவோர் வரும் 4 முதல் 6 ம் தேதியில் விருப்ப மனு அளிக்கலாம் . அதன் பின் பா.ஜ., தேர்தல் குழுவுடன் எங்கள் பேச்சு துவங்கும். நாட்டு நலன் கருதி மத்தியில் நல்லாட்சி அமைய தேசப்பற்றோடு கூடிய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என நினைக்கிறோம்.
மாநில கட்சிகள் நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சியாக செயல்படக்கூடிய முக்கிய தருணம் இது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இண்டியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ளது. அந்த கூட்டணியின் கருத்து வேறுபாடும், திறனற்ற செயல்பாடும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை குறைத்துக்கொண்டு போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து