பா.ஜ.,வில் இருந்து விலகிய கவுதம் கம்பீர்
டெல்லி அரசியலில் இருந்து விலகுவதாக பா.ஜ., எம்.பி.,யும் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருந்த கவுதம் கம்பீர், கடந்த 2019 மார்ச் மாதம் பா.ஜ.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். டெல்லி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
வரும் லோக்சபா தேர்தலில் டெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் போட்டியிட சீட் வழங்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக, கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இதுதொடர்பாக பதிவிட்டுள்ள கவுதம் கம்பீர், 'கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அரசியல் பணிகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்களுக்கு சேவை அளிக்க எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து