கூட்டணி குறித்த விமர்சனம், வேதனை அளிக்கிறது: வைகோ
லோக்சபா தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னம் கேட்டு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதால் பம்பரம் சின்னத்தைக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.தி.மு.க., வழக்கு தொடுத்தது. அந்த மனுவில், பம்பரம் பொது சின்னம் இல்லை. வேறு எந்தக் கட்சியும் அதை கோரவில்லை. எனவே, எங்களின் மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர் மற்றும் அருள்முருகன் அமர்வு, ம.தி.மு.க., மனுவுக்கு பதில் அளிக்கும் தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், கூட்டணி தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், லோக்சபா தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு தி.மு.க., உடன் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றது. ஆனால், கழக தோழர்கள் சமூக வலைதளங்களில் தேர்தல் கூட்டணி குறித்து பதிவிடுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும் எனக்கு மன வேதனையை அளிக்கின்றது. தமிழ்கத்தின் நலன்களுக்காகக் குரல் கொடுத்தும் தன்னலம் கருதாது பாடுபட்டு வரும் இயக்கம், ம.தி.மு.க., என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து