நெல்லை பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு
திருநெல்வேலியில் வரும் 28ம் தேதி நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேகிறார்.
தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வருகிறார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பிப்.,27ல் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாள், தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று குலசேகரப்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் மேற்கொள்ளவுள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அடுத்து, துாத்துக்குடியில் வெளி துறைமுக விரிவாக்கப் பணிகளை துவக்கி வைக்கிறார். ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் 520 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே துாக்கு பாலத்தையும், பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி வருகிறார். அங்கு ஜான்ஸ் கல்லுாரி ஹெலிபேடில் இறங்குகிறார். கார் மூலம் திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகத்திற்கு எதிரே உள்ள திடலில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின், ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
திருநெல்வேலியில் பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கான இடத்தை நேற்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கட்சியின் அமைப்புச் செயலர் கேசவ விநாயகம், எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தயா சங்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து