'தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தாமரை சின்னம் போட்டியிடும்'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'' தமிழகம் முழுதும், 39 தொகுதிகளிலும் தாமரை சின்னம் போட்டியிடும்,'' என, மாநில பா.ஜ., துணைத்தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சின்ன தாராபுரத்தில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:
அரவக்குறிச்சி தொகுதி சின்னதாராபுரத்தில் வரும், 21ல் எண் மண் என் மக்கள் யாத்திரை நடக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார். கடந்த, 1980ல் நடந்த எம்.பி., தேர்தலில் எம்.ஜி.ஆர்., பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியாமல் தோற்று போனார். இரண்டு இடங்களில் தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. மூன்று மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார்.
வரும் எம்.பி., தேர்தலில் தமிழகத்தில், 39 தொகுதிகளிலும் தாமரை சின்னம் போட்டியிடும். பிரதமர் வேட்பாளராக மோடி பெயரை சொல்லி, தமிழகத்தில் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க.,வே மனம் திருந்தி கூட்டணிக்கு வந்தால் கூட, தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என, தொண்டர்கள் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.
கரூரில் எம்.பி., ஜோதிமணி மீண்டும் வெற்றி பெற முடியாது. இதனால், அவரே தன்னை எதிர்க்க, காங்., நிர்வாகிகளிடம் பேச சொல்லி இருக்கலாம். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுதும், காங்., வேண்டாம் என, நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து