ஜெ., வீட்டை காப்பாற்றாதவர் தமிழகத்தை காப்பாரா?
தி.மு.க., ஆட்சியில் எப்போதுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மகளிர் உரிமைத்தொகையாக 1,500 ரூபாய் கொடுப்பதாக கூறினார்.
ஆனால், தமிழக மக்கள் அவரை நம்பவில்லை. மக்களோடு துணை நிற்பது, தி.மு.க., என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தான், அந்த தேர்தலில் பழனிசாமியை தோற்கடித்தனர்.
பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கோடநாட்டில் இருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் கொள்ளை நடந்தது.
ஜெயலலிதா வீட்டையே பாதுகாக்க முடியாத பழனிசாமி, தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார். அவர், தன் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதே, கட்சியில் யார் இருக்கின்றனர்; யார் விலகி உள்ளனர் என்பதை பார்ப்பதற்கே.
- ஆர்.எஸ்.பாரதி
அமைப்பு செயலர், தி.மு.க.,
Advertisement


வாசகர்கள் கருத்துகள் (0)