வெற்றி கொண்டாட்டத்திற்கு கூட்டமாக செல்லக்கூடாது: தேர்தல் கமிஷன் தடை

புதுடில்லி ; வரும் 2 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் தேர்தல் முடிவுக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரியில் சமீபத்தில் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. இதில் பதிவான ஓட்டுக்கள் வரும் 2 ம் தேதி எண்ணப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தல் பிரசாரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் முறையாக கடைபிடிக்கப் படவில்லை. இதனால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதற்கு தேர்தல் கமிஷனே முழு காரணம் என்று சென்னை ஐகோர்ட் கண்டித்தது.

இதனை தொடர்ந்து டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஓட்டு எண்ணி முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது கூட்டமாக கூடி கொண்டாடுவதோ கூடாது. தேவை இல்லாமல் யாரும் கூடக்கூடாது. வெற்றி பெறும் நபர்கள் சான்று பெற வரும் போது கூட்டமாக வரக்கூடாது. இருவர் மட்டுமே வரலாம். வெற்றி பெறும் நபர்கள் மக்களை சந்திப்பது கூடாது. தேர்தல் வெற்றி தொடர்பான கூட்டங்கள் ஏதும் நடத்தக்கூடாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)