என்னைத் துரத்தும் அந்த கேள்வி: தமிழிசை சொன்னது என்ன?

"இந்திய மக்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பானதொரு ஆட்சியை பா.ஜ., வழங்க வேண்டும். அதற்கு நானும் கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன்" என, தென்சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா, புதுச்சேரி என இரு மாநில கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ., சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்குகிறார். கவர்னர் பதவியில் இருந்து அவர் விலகியது விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழிசை தெரிவித்துள்ளதாவது:

நான் ஏன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் இதைக் கேட்ட வண்ணம் உள்ளனர். அதற்கு விளக்கமாக இதைப் பதிவு செய்கிறேன்.

நான் பா.ஜ.,வில் இணைந்து 25 வருடங்கள் ஆகின்றன. மாநில செயலாளர் ,தேசிய செயலாளர் போன்ற உயர் பதவிகளை கட்சித் தலைமை வழங்கியது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் மாநிலத் தலைவர் என்ற உயர் பதவியையும் எனக்கு வழங்கியது.

அதற்கு எல்லாம் மேலாக தெலங்கானா கவர்னர் பதவியை மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு எனக்கு வழங்கியது. மேலும், பாண்டிச்சேரி மாநிலத்திலேயே பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. கவர்னர் என்றாலே பெருமிதம், புகழ் இருக்கும். அதிலும் இரண்டு மாநிலத்துக்கு கவர்னர் என்றால் சும்மாவா?

அதற்கான மரியாதையும் மகுடமும் மிகவும் உயர்ந்தது. அதை ஏற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வந்தேன். ஒரு கவர்னருக்கு முன்னுதாரணமான பல திட்டங்களை செயல்படுத்தினேன். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் நான் எடுத்த முயற்சியால் அந்த மாநில மக்கள் பயனடைந்தனர்.

தற்போது தேர்தல் காலம். களத்தில் எனது கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என பா.ஜ., தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்தப் புகழ் தொடர வேண்டும்.

மீண்டும் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி அரியணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணை நிற்க வேண்டும். களத்தில் நின்று இருந்து பணியாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன்.

இந்திய மக்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பானதொரு ஆட்சியை பா.ஜ., வழங்க வேண்டும். அதற்கு நானும் கட்சிப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக பதவியை ராஜினாமா செய்தேன். தென் சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். அவர்களுக்கு ஒரு புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற காரணத்தால் ராஜினாமா செய்தேன்.

தேசிய நீரோட்டத்தில் தென்சென்னையும் இணைந்து தொழில் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வீறு நடை போட வேண்டும். தென்சென்னை மக்கள் எனக்கு பெரும் ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Sai Shriram - Oslo, நார்வே
26-மார்-2024 07:22 Report Abuse
Sai Shriram தமிழிசை ஒரு வாரிசு அரசியல்வாதி. பாஜகவினர் தமிழிசை போன்ற வாரிசு அரசியல் வாதிகளை ஆதரிக்கமாட்டார்கள்.
Appan - London, யுனைடெட் கிங்டம்
26-மார்-2024 05:25 Report Abuse
Appan பாஜாகாவில் ஒரு star candidate என்றால் தமிழிசை தான்..இவர் அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்..இவரின் தனித்தன்மை பிஜேபி என்பதை விட தமிழர், நம் மகள் என்ற எண்ணம் வருகிறது..அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்