Advertisement

டீ, வடைக்கு கைக்காசு பா.ஜ.,வினர் புலம்பல்

அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய கட்சிகள் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தேர்தல் செலவுகளுக்காக பணத்தை அள்ளி வீசுகின்றன; இதனால், சுணக்கமின்றி வேலை நடக்கிறது.

அதேநேரம், 7 கட்சி கூட்டணியுடன் மூன்றாவது அணி அமைத்து பா.ஜ., தேர்தலை சந்திக்கிறது. திராவிட கட்சிகளுக்கு இணையாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, சக்தி கேந்திரா பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க., - தி.முக., கட்சிகள், பூத் கமிட்டி அமைக்க தங்கள் நிர்வாகிகளை வலுவாக கவனித்துள்ளன. ஆனால், இதுபோன்ற கூட்டங்களுக்கு டீ, வடை செலவுகளை கூட கைக்காசை நம்பியே நடத்த வேண்டி உள்ளதாக பா.ஜ.,வினர் புலம்புகின்றனர்.

மாநிலத் தலைவர் அண்ணாமலையே கோவை தொகுதியில் போட்டியிடுவதால், பூத் கமிட்டி நிர்வாகிகளை 'கவனிப்பதுடன்' தேர்தல் பிரசார செலவுகளுக்கும் பா.ஜ., கவனிக்குமா என்ற எதிர்பார்ப்பு, கோவை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்