Advertisement

தென்காசியில் போஸ்டர் போட்டி: பா.ஜ., வேட்பாளர் யார்?

தென்காசி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் கட்சியின் 'ஸ்டார்ட் அப்' பிரிவு தலைவர் ஆனந்தன் அய்யாசாமி போட்டியிட வாய்ப்புள்ளது. அவர் ஓராண்டுக்கும் மேலாக தொகுதியில் தங்கியிருந்து தேர்தல் பணியாற்றி வருகிறார். அவர் தென்காசி தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லுார் மண்ணின் மைந்தரும் கூட.

தென்காசியை ஆனந்தனுக்கு தருவதற்காகத் தான், பா.ஜ., அணியில் ஒரே ஒரு சீட் கேட்ட புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை வெளியேற்றியதற்கு காரணம் என்ற பேச்சும் அடிபட்டது.

ஆனால் தற்போது, தென்காசி தொகுதியை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியனும் கேட்டு வருகிறார். அவருக்கு தென்காசியை தவிர வேறு தொகுதிகள் தரவும் வாய்ப்பில்லை.

இதனிடையே இரு தரப்பிலும் போஸ்டர் ஒட்டி தேர்தல் பணியை துவக்கியுள்ளனர். தொகுதி யாருக்கு என்பது முடிவாகும் முன்னரே, இருதரப்பினரும் போஸ்டர் ஒட்டி பிரசாரத்தில் இறங்கியுள்ளதால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்