வட்டார வழக்கில் பா.ஜ., பிரசார 'வீடியோ'
வட்டார பேச்சு வழக்கில் பிரசார 'வீடியோ'க்களை வெளியிடும் பணிகளில் பா.ஜ., ஈடுபட்டுஉள்ளது.
'நான் மோடியின் குடும்பம்' என்ற பிரசாரத்தை நாடெங்கும் பா.ஜ., முன்னெடுத்துள்ளது. 'நான் மோடியின் குடும்பம்' என்ற தலைப்பில், அனைத்து மொழிகளிலும் பிரசார வீடியோக்களை பா.ஜ., வெளியிடவுள்ளது.
தமிழகத்தில் குடியாத்தம், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வாலாஜாபாத், வந்தவாசி, மரக்காணம், கடலுார், கள்ளக்குறிச்சி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், அந்தியூர், காங்கேயம், கோத்தகிரி, அவினாசி, பொள்ளாச்சி, மதுரை, தேனி, தென்காசி ஆரல்வாய்மொழி, நாசரேத், கீழக்கரை, தேவகோட்டை, நாகை என 23 வட்டார பேச்சு வழக்குகளில் வீடியோ வெளியாகிறது.
இதற்காக அந்தந்த வட்டார பேச்சு வழக்கு களில் பேசக்கூடிய, குரல் வளமிக்க ஆண்கள், பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.,வின் பிரசார வீடியோவில் பேச விரும்புபவர்கள், 'நான் மோடியின் குடும்பம்' என்று அவரவர் வட்டார பேச்சு வழக்கில் பேசி வீடியோ அனுப்புமாறு, பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாசகர் கருத்து