இ.பி.எஸ்., தான் நல்ல முதல்வர்: அடித்து சொல்கிறார்  நடிகை கஸ்தூரி

பெண்ணியம், சமூகம், அரசியல் கருத்துக்களை தனக்கே உரிய பாணியில், தடாலடியாக வெளிப்படுத்தி, பரபரப்பு நெருப்பை பற்ற வைப்பதில் கில்லாடி நடிகை கஸ்துாரி. 'தற்போது, தனது சமூக வலைதள பக்கத்தில், முக்கியமான தொகுதிகளில், எந்த வேட்பாளருக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்ற, தன் பரிந்துரையை பதிவிட்டு வருகிறார். அவர் நமக்கு அளித்த பேட்டி:

எத்தனை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, மக்களுக்கு அடையாளம் காட்டுவீர்கள்?முக்கியத்துவம் வாய்ந்த, குழப்பத்தில் மக்கள் தவிக்கும், 20 முதல், 30 தொகுதிகளில், கட்சி பாகுபாடின்றி நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து, மக்களுக்கு அடையாளம் காட்டுவேன். இதில், முதல்வர் வேட்பாளர்களான, இ.பி.எஸ்., - ஸ்டாலின் தொகுதிகள் இடம் பெறாது.

முதற்கட்டமாக, திருவொற்றியூர் தொகுதியில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மாதவரம் தொகுதியில், ம.நீ.ம., வேட்பாளர் ரமேஷ் கொண்டலசாமிக்கும் மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என, கேட்டுள்ளேன். என் பரிந்துரை பட்டியலில் இருக்கும், மற்ற வேட்பாளர்கள் பெயர் அடுத்தடுத்து வெளியிடப்படும்.

முதல்வர் குறித்த ஆ.ராசா கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?அவர் கருத்தை கடுமையாக கண்டித்துள்ளேன். தி.மு.க.,விற்கு இது புதிதல்ல. மத்திய அமைச்சராக இருந்தவர், இத்தனை கீழ்த்தரமாக பேசலாமா. தி.மு.க.,வின் கீழ்மட்ட பேச்சாளர்கள் நிலை தான் பரிதாபம். அவர்கள் செய்ய வேண்டிய பணியை எல்லாம், ஆ.ராசா, தயாநிதி, உதயநிதி போன்றோர் மேற்கொள்கின்றனர்.

தமிழகத்திற்கு, எந்த கட்சியின் ஆட்சியை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?என் கண்ணிற்கு, இ.பி.எஸ்., நல்ல முதல்வராக தெரிகிறார். அவர் மட்டுமின்றி, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்களும், கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டனர். 'டாஸ்மாக்' விஷயத்தில், நான் வேறுபடுகிறேன். அ.தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். விமர்சனங்கள் இருந்தாலும், இ.பி.எஸ்., நல்ல முதல்வர் என்பதில் மாற்றமில்லை.

பா.ஜ.,வால், இத்தேர்தல் வாயிலாக, தமிழகத்திற்குள் தடம்பதிக்க முடியுமா?அதிகபட்சம் இரண்டு சீட் வெல்லும். ஆனால், தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி பெறுகிறது. அடுத்த லோக்சபா தேர்தலில் தமிழக மக்களின் கணிசமான ஆதரவை அக்கட்சி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)