அ.தி.மு.க., கூட்டணி ஜவ்வ்வ்...
லோக்சபா, சட்டசபை , உள்ளாட்சி என எந்த தேர்தலாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டணியை இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது என, அனைத்திலும் அ.தி.மு.க., முதன்மையாக இருக்கும்.
ஜெயலலிதா இருந்தவரை, அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க, அனைத்து கட்சிகளும் ஆர்வம் காட்டின. இம்முறை பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகிய அ.தி.மு.க., மெகா கூட்டணி உருவாக்க திட்டமிட்டது. ஆனால், பெரும்பாலான கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், அ.தி.மு.க., கூட்டணி முடிவாகாமல் உள்ளது, அ.தி.மு.க.,வினரிடம் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., பலமான கூட்டணி அமைத்திருப்பதால், அதை எதிர்கொள்ள கூட்டணி அவசியம் என்ற எண்ணம், கட்சியினர் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. எங்கள் பலவீனத்தை உணர்ந்து கொண்ட, சிறிய கட்சிகள் அதிகம் எதிர்பார்க்கின்றன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து