மவுன குருவாக மோடி இருப்பது ஏன் ஸ்டாலின் கேள்வி

"விஷ்வ குரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர், மவுன குருவாக இருப்பது ஏன்?" என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த காலத்தில் தி.மு.க., செய்த பாவத்தால் தான் இலங்கை அரசால் இன்று தமிழக மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் பேசி இருக்கிறார்.

தி.மு.க., அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்கு தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா? கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதையும் சித்ரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன். அவர்கள் இந்தியர்கள் இல்லையா?

படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக இலங்கை அரசு அறிவிக்கிறது. இந்திய அரசு இதை அதிகாரபூர்வமாக, வெளிப்படையாக கண்டிக்காதது ஏன்?

இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ., ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

இதற்கெல்லாம் பதிலில்லை; தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழகத்துக்கு செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பதில் சொல்லுங்க பிரதமரே என்று தமிழக மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை ஆனால், வழக்கமான புலம்பல்கள் மட்டுமே மேடையில் எதிரொலித்தன.

விஷ்வ குரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுன குருவாக இருப்பது ஏன். தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ramani - dharmaapuri, இந்தியா
18-மார்-2024 07:09 Report Abuse
ramani மோடிஜி விஸ்வ குருதான் இதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை. அதுசரி ஜாபர் சாதிக் கைதுக்கு ஏன் மெளனமாகிவிட்டீர்கள்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்