கூட்டணி 'அப்டேட்'
பா.ஜ., - பா.ம.க., கூட்டணி
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் வாயிலாக பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம் பா.ஜ., பேச்சு நடத்தியது. அதன் இறுதியில், ராமதாஸ் கொடுத்த 11 தொகுதிகளில், ஏழு தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி மூன்று தொகுதிகளுக்கு கூட்டணிக் கட்சியுடன் ஆலோசனை நடத்தி சொல்வதாக பா.ஜ., தலைமை கூறியுள்ளது. ஐந்து தொகுதிகளில் வென்றால் அமைச்சர் பதவி, கூடுதலாக வென்றால் இணையமைச்சர் அல்லது ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்படும் என பா.ஜ., கூறியுள்ளது. சேலத்தில் வரும் 19ல் நடக்கும் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கிறார். அன்று பா.ம.க., வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவர்.
திருநாவுக்கரசர் இல்லை
காங்., கட்சி கடந்த 8ம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும், நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. இந்த நிலையில், தி.மு.க., உடனான காங்., கூட்டணி உறுதியாகி, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இறுதிப் பட்டியல் இன்று வெளியாகலாம். திருச்சி சிட்டிங் எம்.பி.,யான திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று கட்சியில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டஉத்தேச வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
வாசகர் கருத்து