போதை பொருளுக்கு எதிராக பா.ஜ., பிரசாரம் துவக்கம்
தமிழக பா.ஜ., 'டிரக் ப்ரீதமிழகம்' எனப்படும், 'போதையில்லா தமிழகம்' என்ற பெயரில் போதை பொருளுக்கு எதிரான பிரசாரத்தை நேற்று முதல் துவக்கியுள்ளது.
தமிழகத்தில் போதை பொருள் கலாசாரம் அதிகரித்து உள்ளதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும், தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை புகார் தெரிவித்து உள்ளார்.
இதனால் அவர், பொது மக்களுடன் இணைந்து போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்து மாறு, கட்சியினருக்கு உத்தர விட்டார்.
அதன்படி, பா.ஜ., தொண்டர்கள் பள்ளி, கல்லுாரிகள், பஸ் நிலையங்களில் போதை பொருளுக்கு எதிராக பிரசாரம் செய்யும் பணியை, நேற்று முதல் துவக்கினர். அவர்கள், இந்த பணியை ஒரு வாரத்திற்கு, தினமும் இரண்டு மணி நேரம் என, 15 மணி நேரம் செய்ய உள்ளனர்.
இதுதவிர, 'https://drugfreetamilnadu.com/' என்ற இணையதளத்தையும் பா.ஜ., துவக்கியுள்ளது. அதில், போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
'உறுதிமொழி ஏற்போம்' என்ற தலைப்பை கிளிக் செய்து, பெயர், மொபைல் போன் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பின், போதையில்லா தமிழகத்திற்காக உறுதிமொழி எடுத்ததற்காக, அண்ணாமலை கையெழுத்திட்ட சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து