Advertisement

பா.ஜ.,வில் சரத்குமார் ஐக்கியம் காரணம்... கனவா?

சமத்துவ மக்கள் கட்சி யை பா.ஜ.,வில் சரத்குமார் இணைத்துள்ளார். அதற்கு தான் கண்ட கனவே காரணம்என அவர் கூறினாலும், அமைச்சர் பதவி தருவோம்என பா.ஜ., தரப்பில் அளிக் கப்பட்ட வாக்குறுதியே காரணம் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

இதுகுறித்து சமத்துவமக்கள் கட்சி மற்றும் பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள்எம்.பி.,சசிகலா புஷ்பா, மாநில நிர்வாகி கரு.நாகராஜன் உள்ளிட்ட ஒரு சிலர் தான் நாடார் சமுதாயத்தின் வி.ஐ.பி.,க்களாக பா.ஜ.,வில் உள்ளனர். ஹிந்து நாடார் சமுதாயத்தில், நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒரு வி.ஐ.பி.,யும் இருந்தால்கட்சியின் ஓட்டு வங்கி வலிமை பெறும் என,பா.ஜ., கருதுகிறது.

சரத்குமார், பா.ஜ.,வில் இணையும் விஷயம், அரவிந்த் மேனனுக்கும், அண்ணாமலைக்கும் மட்டும் தான் முன்கூட்டியே தெரியும். நேற்று காலை அண்ணாமலையின் உத்தரவின்படி, மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் தி.நகரில்உள்ள சரத்குமார் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்து அவரை கமலாலயத்திற்கு அழைத்துச் சென்றபின்,கட்சியில் இணைந்தார்.

சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.,வில் இணைப்பதற்கு பரிசாக, சரத்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்குவதற்கு பேச்சு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை ஆதரித்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய, நான்கு மாநிலங்களில் சரத்குமார் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதேபோல, சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவும் பா.ஜ.,வுக்காக வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம் முழுதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவும்ஏற்பாடாகி இருக்கிறது.

விரைவில் கட்சியில் நடிகர்சரத்குமாருக்கு முக்கிய பதவிஅளிக்கவும், பா.ஜ., தரப்பில் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சென்னை பிரசார பொதுக்கூட்டத்தில் சரத்குமாரும் பங்கேற்று பேசுவார். விருதுநகர் தொகுதியில் பா.ஜ.,வுடன் சமத்துவ மக்கள் கட்சி இணைக்கும் விழாவை நடத்தவும் சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி, பதவியை சரத்குமார் வகித்தபோது, அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என்ற நாடார் சமூகத்தினரின் கோரிக்கை,அப்போது நிராகரிக்கப்பட்டது.

எனவே, எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அதன்பின் தனிக்கட்சி துவங்கி, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளார்.

இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்