தோற்றுவிடுவோம் என பயப்படுகிறது காங்.,: ராகுலை சாடிய ஸ்மிருதி இரானி
"வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக்கும்,''என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி தெகுதியில் மீண்டும் ஸ்மிருதி இரானி போட்டியிட இருக்கிறார். கடந்த 2019 தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல்காந்தியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்தமுறை, அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக காங்., தலைவர் பிரதீப் சிங்கால் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியவதாவது:
காங்கிரசுக்கு தோல்வி பயம் ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாக, அமேதி தொகுதிக்கு தனது வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் காலதாமதம் செய்கிறது. இது அவர்களின் தோல்விக்கான அறிகுறியாகும்.
அமேதி தொகுதியை, காந்தி குடும்பத்தின் கோட்டை என்று கூறுகிறார்கள். பிறகு ஏன் வேட்பாளரை அறிவிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். நான் தொடர்ந்து, அமேதி தொகுதியில் உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து