தமிழக பா.ஜ., வேட்பாளர்கள் யார்? 6 ல் அமித் ஷா தேர்வு; 7 ல் மோடி முடிவு

தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும், 6ம் தேதி டில்லியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசித்து பட்டியலை இறுதி செய்கிறார்.

அதை அடுத்த நாள், பிரதமர் மோடியிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தேசிய அளவில் பா.ஜ., கூட்டணியில் இருந்ததில், அ.தி.மு.க., தான் பெரிய கட்சி. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி, 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறும்.

இதற்காகவே, கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்ட அ.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், பா.ஜ., தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதனால் தான், பா.ஜ., உடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக பன்னீர் செல்வம் அறிவித்தும், அவரை தமிழக பா.ஜ.,வில் கூட்டணிக்காக அமைக்கப்பட்ட குழுவினர் சந்திக்காமல் உள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கும் பன்னீரை அழைக்கவில்லை.

இதுதவிர கூட்டணி இறுதி ஆகாததால் தான், பா.ஜ., சார்பில் முதல்கட்டமாக வெளியிடப்பட்ட, 195 வேட்பாளர்கள் பட்டியலில், தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழலில், தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக வரும், 6ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லியில் முக்கிய கூட்டத்தை நடத்துகிறார்.

அதில், மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். அந்த கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த பட்டியலை அடுத்த நாள், பிரதமர் மோடியிடம் காட்டி, ஒப்புதல் பெறப்பட உள்ளது.

தமிழகம் உட்பட இரண்டாம் கட்ட பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வரும், 8, 9ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அ.தி.மு.க., உடன் கூட்டணி ஏற்பட்டால், அதற்கு ஏற்ப பட்டியலில் மாற்றங்கள் செய்யவும் பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்