கமல்நாத்தை தொடர்ந்து மணீஷ் திவாரி? - காங்கிரசில் என்ன நடக்கிறது?
காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்துள்ள மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் வெளியேறுவதை தடுக்க, கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளார். கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், 230 தொகுதிகளில், 66 இடங்களையே காங்கிரஸ் வென்றது. இதையடுத்து, கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் நீக்கப்பட்டார்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா லோக்சபா தொகுதியில், ஒன்பது முறை வென்ற அவர் தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு தரப்படாதது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அவருடைய மகன் நகுல் தற்போது சிந்த்வாரா தொகுதியின் எம்.பி., யாக உள்ளார். அவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா; கிடைத்தாலும் வெற்றி கிட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா லோக்சபா தொகுதியில், ஒன்பது முறை வென்ற அவர் தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு தரப்படாதது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அவருடைய மகன் நகுல் தற்போது சிந்த்வாரா தொகுதியின் எம்.பி., யாக உள்ளார். அவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா; கிடைத்தாலும் வெற்றி கிட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் தன் மகனுடன் கமல்நாத் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடில்லியில் அவர் தற்போது முகாமிட்டுள்ளது, இந்த சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்த சூழ்நிலையில், கமல்நாத்துக்கு ஆதரவாக, மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் புதுடில்லி சென்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இதில் அடங்குவர். ஒரே நேரத்தில் கட்சியில் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது, காங்., தலைமைக்கு கவலையை ஏற்படுத்திஉள்ளது. அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினால், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்க முடியாது.கடந்த 2020ல், ஜோதிராதித்ய சிந்தியா தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அதனால், ஆட்சி கவிழ்ந்து, முதல்வர் பதவியை கமல்நாத் இழக்க நேரிட்டது.
தற்போதும், அதுபோல் அதிகளவில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினால், லோக்சபா தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால், கட்சியின் மாநிலத் தலைவர் ஜிது பட்வாரி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உமங்க் சிங்கார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கமல்நாத் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரிடம் பேசி வருகின்றனர்.
இதற்கிடையே, 15க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட ஆதரவாளர்களும், புதுடில்லிக்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கமல்நாத் பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துவிட்டால், இவர்களும் கட்சி மாறுவர் என்று கூறப்படுகிறது.
@அடுத்தது மணீஷ் திவாரி?
@
காங்கிரசில் இருந்து பல முக்கிய தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில், கமல்நாத்தை தொடர்ந்து, மற்றொரு மூத்த தலைவர் மணீஷ் திவாரியும் வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பா.ஜ.,வில் இணைந்து, பஞ்சாபின் லுாதியானா லோக்சபா தொகுதியில் போட்டியிட அவர் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை மணீஷ் திவாரி மறுத்துள்ளார்.
வாசகர் கருத்து