பா.ம.க,. ரகசிய பேச்சு - கடலூர் பா.ஜ., கொதிப்பு
![](https://images.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3553718.jpg)
பா.ஜ.,வுடன், பா.ம.க.,வினர் ரகசியமா கூட்டணி பேச்சு நடத்தி வருகின்றனர். இதில், கடலுார் தொகுதியை கேட்டு வாங்குவதில் மருத்துவர் ராமதாஸ் உறுதியாக இருக்கிறாராம். ஆனால் மாவட்டச் செயலராக இருந்த ஏழுமலை உள்ளிட்ட பா.ம.க., முக்கிய நிர்வாகிகள், கடந்த சட்டசபை தேர்தல் முடிந்ததும் பா.ஜ.,வில் ஐக்கியமாகிவிட்டனர். இந்த தொகுதியில் உள்ள வன்னியர் சமூக வாக்குகள், இப்போது பா.ஜ.,வின் ஓட்டு வங்கியாக மாறியுள்ளதாம். அதனால், 'கடலூரை பா.ம.க., வுக்கு விட்டு கொடுக்காமல் நாமளே போட்டியிடணும். அதையும் மீறி, பா.ம.க.,வுக்கு தாரை வார்த்தா, நாங்கள் தேர்தல் பணி செய்ய மாட்டோம்'னு பா.ஜ.,வினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
வாசகர் கருத்து