மோடி வேலை தரவில்லை... தமிழகம் தந்தது: சீமான் பேச்சு
"காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதிலேயே பா.ஜ., அரசின் சர்வாதிகாரம் தெரிகிறது. பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடித்தால் இந்தியா என்னும் நாட்டை நாம் மறந்துவிட வேண்டியது தான்" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருவள்ளுரில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
பா.ஜ., என்ன செய்தாலும் யாரும் கேட்கக் கூடாது. கரும்பு விவசாயி சின்னத்தை பறித்தால் நாம் தமிழர் வாக்கு வங்கி குறையும் என நினைக்கிறார்கள். அந்த சின்னம் இல்லையென்றாலும் நாங்கள் கடுமையாக உழைப்போம்.
2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறேன் என சொன்னது யார். குறைந்தது 200 பேருக்காவது வேலையை தந்தார்களா. ஆனால், வேலைவாய்ப்பை தந்தது தமிழகம் தான்.
இங்கு ஒன்றரை கோடி வடஇந்தியர்கள் வேலைக்காக வந்துள்ளனர். நெய்வேலியில் ஆட்களை தேர்வு செய்ததிலும் பலர் வடஇந்தியர்கள் தான். அதில் ஒருவர் கூட தமிழன் கிடையாது.
பா.ஜ., ஆட்சியில் வளர்ச்சி என்கிறார்கள். எங்கு வளர்ச்சி உள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு இருக்கிறது என்றால் எந்தத் துறையில் இருக்கிறது என சொல்லட்டும். அனைத்தையும் தனியார்மயப்படுத்திவிட்டு எந்த துறையில் வேலை இருக்கிறது என இவர்களால் சொல்ல முடியும்?
என்னுடைய சின்னம் மக்களிடையே சேர்ந்துவிட்டது. சின்னமும் ஒரு வலிமை தான். காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதிலேயே பா.ஜ., அரசின் சர்வாதிகாரம் தெரிகிறது. பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடித்தால் இந்தியா என்னும் நாட்டை நாம் மறந்துவிட வேண்டியது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து