வாங்க, மருமகனே வாங்க! வரதட்சணை கேட்றாதீங்க!

மதுரை தெற்கு, ம.தி.மு.க., வேட்பாளர் பூமிநாதன். மூன்று முறை போட்டியிட்டவர் (கவனிக்கவும்: போட்டியிட்டவர்) என்பதால், தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். மதிச்சியம் பகுதியில், பிரசாரத்திற்கு சென்ற போது, ஆடு, மாடு, கோழி, அரிசி, பருப்பு,பழங்கள், மளிகை பொருட்கள் உட்பட, 27 வகையான சீர் வரிசையுடன், மக்கள் வரவேற்று ஆச்சரியப்படுத்தினர்.இப்பகுதியில் பலர், கிராமங்களில் இருந்து வந்தவர்கள். மறுவீட்டு சடங்கிற்கு வரும் மருமகனை சீர்வரிசை பொருட்களுடன் வரவேற்கும் கிராமத்து வழக்கப்படி, தொகுதியை மகளாகவும், பூமிநாதனை மருமகனாகவும் பாவித்து, இப்படி செய்தார்களாம்.'இதோடு முடிச்சிக்குங்க, மருமகனே... ஓட்டுங்ற வரதட்சணை கேட்டுபுடாதீங்க...'னு, 'மைண்ட் வாய்ஸ்' குடுத்திருந்தா?வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)