வளர்ச்சி திட்டங்களில் காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை : பிரதமர் மோடி
'"நாட்டின் இன்றைய தேவைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது" என, பிரதமர் மோடி பேசினார்.
ஒடிசா மாநிலம். சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஜஜ்பூர் மற்றும் ஒடிசாவில் வளர்ச்சிக்கான புதிய நீரோட்டம் இன்று ஓடத் துவங்கி உள்ளது. இயற்கை எரிவாயு, அணுசக்தி, பெட்ரோலியம், போக்குவரத்து, ரயில்வே துறைகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளரச்சி திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதனால் தொழில்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
நாட்டின்இன்றைய தேவைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் உர்ஜா கனகாத் திட்டத்தின்கீழ், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா என ஐந்து பெரிய மாநிலங்களில் இயற்கை எரிவாயு விநியோகத்துக்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்த காலகட்டத்தில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களில் அவர்கள் ஆர்வம் காட்டியது இல்லை. ஆனால் பா.ஜ., தலைமையிலான இந்த அரசு பல திட்டங்களை சரியான நேரத்தில் மக்களுக்காக செய்து வருகிறது
ஒடிசா மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உள்ளூர் ஆதாரங்களைக் கொண்டு நவீன போக்குவரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக இணைப்பை மேம்படுத்த ஜஜ்பூர், பத்ரக், ஜகத்சிங்பூர், மயூர்பஞ்ச், கோர்தா, கஞ்சம், பூரி, கெந்துஜார் உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து