காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் முடித்துள்ளேன்: பிரதமர் மோடி
"காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றையொன்று எதிர்ப்பது போல இருந்தாலும் இருவரின் சித்தாந்ததும் ஒன்று தான். தனது அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ், அசாமை தன் பிடியில் வைத்திருக்கப் பார்க்கிறது" என, பிரதமர் மோடி பேசினார்.
அசாமில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:
நாடு முழுதும் மோடியின் உத்தரவாதம் உள்ளது. இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதங்களை நான் தருகிறேன். மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு சாட்சியாக விளங்குகிறது.
காங்கிரஸ் கட்சி இங்குள்ள மக்களுக்கு பிரச்சனையை மட்டுமே தந்தது. பா.ஜ., அதை மென்மையாக மாற்றி அமைத்து. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாட்டில் உள்ள மக்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் தகுதியான திட்டங்கள் அவர்களைச் சென்று சேர்கிறது.
முத்தலாக் ஒழிப்பு சட்டத்தால் இஸ்லாமிய சகோதரிகள் பயன் பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அசாம் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
திரிபுராவில் சி.பி.எம்., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது ஊழல் தலைதுாக்கியது. இடதுசாரி கட்சிகள் இந்த மாநிலத்தை ஊழல் நிறைந்த குகை போல மாற்றின. வடக்கு - கிழக்கு பிரச்னையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு எந்தக் கவனமும் செலுத்தவில்லை. இந்த மாநிலத்தை கொள்ளையடித்ததே அவர்களின் கொள்கை.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றையொன்று எதிர்ப்பது போல இருந்தாலும் இருவரின் சித்தாந்ததும் ஒன்று தான். தனது அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ், அசாமை தன் பிடியில் வைத்திருக்கப் பார்க்கிறது.
இவர்களுக்கு ஊழல் மற்றும் கொள்ளையடிப்பதற்கான வழிகள் எப்போதும் திறந்தே இருக்கிறது. காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் நான் செய்து முடித்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து