மோடி தமிழில் பேசினால் என்ன நடக்கும்: அண்ணாமலை கணிப்பு

"மோடி தமிழில் பேசினால் தமிழக அரசியல் கட்சிகளில் ஒருவர் கூட இருப்பதற்கு வாய்ப்பு இல்லை," என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
பிரதமர் மோடி சாதாரணமாக இந்த பொதுக்கூட்டத்திற்கு வரவில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய பலம் பொருந்திய அனைத்து தலைவர்களையும் தன்னோடு அழைத்து வந்திருக்கிறார்.
இந்த முறை 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும். லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பா.ஜ.,வெற்றி பெற்றால் தான்,வறுமை, விவசாயம், ஏழ்மைக்காக நாம் பாடுபட முடியும்.
குழந்தையிடம் கேட்டால்கூட, 3வது முறை மோடி தான் பிரதமர் என்று. தமிழ்மொழியை கற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் சொல்கிறார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் நம்முடன் பேச துவங்கிவிட்டார். மோடி தமிழில் பேசினால் தமிழக அரசியல் கட்சிகளில் ஒருவர் கூட இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்
வாசகர் கருத்து