400 இடங்களில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி உறுதி

"லோக்சபா தே்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும். இதனை மக்கள் முடிவு செய்துவிட்டனர்" என, பிரதமர் மோடி பேசினார்.
தெலங்கானா மாநிலம். நாகர் கர்னூலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
தெலங்கானாவை அழிக்க காங்கிரசுக்கு 5 ஆண்டுகள் போதும். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ., தலைமையிலான அரசு தெலங்கானாவின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
காங்கிரஸ், பி.ஆர்.எஸ்., என இரு கட்சிகளும் இணைந்து தெலங்கானாவின் கனவுகளை அழித்து வருகிறது. மாநிலத்தின் நலனுக்காக காங்கிரஸ் எப்போதும் பாடுபடுவது கிடையாது.காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகள் வாழ்க்கையை முன்னேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை காங்கிரஸ் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது.ஆனால் , பா.ஜ., ஆட்சியின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர்கிறது. பா.ஜ., செயல்படுத்த நினைக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கு காங்கிரசும், பி.ஆர்.எஸ்., கட்சிகளும் தடையாக உள்ளன.
இவர்கள் சமூகநீதி என்னும் போர்வையில் ஊழல் அரசியல் செய்து வருகின்றனர். வரும் லோக்சபா தே்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும். இதனை மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
வாசகர் கருத்து