'டாபிக்' மாற்றிய பொருளாளர்
'என்னை கொரோனா 'டெஸ்'ட் எடுக்கச் சொல்லி, இந்த ஆட்சியில ரொம்ப இம்சை பண்ணிட்டாங்க' என்று முரசு கொட்டி பிரசாரம் செய்தார் பொருளாளர். 'அதுல என்ன தப்பு?' என, மக்கள் நகர்ந்து போனதால், சட்டென, 'டாபிக்'கை மாற்றி விட்டாராம்.
'டார்ச்' லைட்டுக்கே வெளிச்சம் காட்டிய கதை
வெளிச்சக் கட்சியின் வேட்பாளர்கள் பலருக்கு அவர்களுடைய தேவையறிந்து, வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சும் வேலையில் இலைக் கட்சியினர் இறங்கினர். இதனால், வேட்பாளர்கள் வெயில் மேல் பழியை போட்டு வீட்டுக்குள் படுத்துவிட்டார்களாம்.
ஜாதி விமர்சனம் கூடவே கூடாது
ஆட்சியின் தலைவர் குடும்பத்தையே தரக் குறைவாக பேசிய, சூரிய கட்சி மன்னரை இலைக் கட்சி ஆட்கள் வறுத்தெடுத்தனர். அப்போது, தலைவரிடம் இருந்து உத்தரவு வந்ததாம்: எக்காரணம் கொண்டும், எங்கேயும் அவரை ஜாதியைச் சொல்லி விமர்சிக்கக் கூடாது!.
பெண் அமைச்சருக்கு மணப்பாறை முறுக்கு
விளக்குத் தொகுதியில் போட்டியிடும் தாமரை கட்சியின் பூ நடிகைக்கு ,மத்திய அமைச்சர் அம்மணி பிரசாரம் செய்தார். வடக்கே கிடைக்காத அயிட்டமாக பரிசளிக்க விரும்பிய பூ, மணக்க மணக்க மணப்பாறை முறுக்கு கொடுத்து அசத்தினாராம்.
தலைவர் உத்தரவு; புலம்பும் வேட்பாளர்கள்
கை கட்சியினர் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போன் போடும் கிரி தலைவர், 'எப்படியாவது ஜெயிக்கணும்; அப்பதான், பதவி தப்பும்'னு சொல்றாராம். 'எங்க பிரச்னையை யாருகிட்ட போய் சொல்றதுன்னு தெரியலையே' என்று சொல்லி போனை வைக்கிறார்களாம் வேட்பாளர்கள்.
வாசகர் கருத்து