மூன்று நாள் பயணம் : மீண்டும் தமிழகம் வரும் மோடி
தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரவிருக்கிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட துவங்கி உள்ளனர். பிரதமர் மோடியும், தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்ச்சியாக, ஜன.,2ல் திருச்சியில் நடைபெற்ற விமான நிலையத்தின் புதிய முனையம் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அடுத்து, ஜன., 19ம் தேதி கேலோ இந்தியா போட்டியின் துவக்கி வைத்தார். மறுநாளான (20ம் தேதி) ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
மூன்றாவது முறையாக, பிப்.,27ம் தேதி பல்லடத்தில் நடந்த என் மண்; என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் பங்கேற்றார். பிப்.,28ம் தேதி தூத்துக்குடியில் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். நான்காவது முறையாக, கடந்த 4ம் தேதி தமிழகம் வந்த மோடி, கல்பாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள விரைவு ஈனுலையை திறந்து வைத்தார்.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு வருகை தர உள்ளார். 15ம் தேதி சேலத்திலும்,16ம் தேதி கன்னியாகுமரியிலும், 18ம் தேதி கோவையிலும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமரின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து