பா.ஜ.,வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: வாரணாசியில் மீண்டும் மோடி போட்டி

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.,வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியும் காந்தி நகரில் அமித் ஷாவும் போட்டியிட உள்ளனர்.

லோக்சபா தேர்தலில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில், கடந்த சில நாள்களாக பா.ஜ., தலைமை ஈடுபட்டு வந்தது. பா.ஜ., வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் நள்ளிரவை கடந்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 195 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 34 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் அமைச்சர்கள், சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட பட்டியலில் 28 பெண்கள், 47 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி, உத்தரபிரதேசம், ம.பி., குஜராத், கேரளா, அசாம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பா.ஜ,. தேசிய பொதுச் செயலர் வினாத் தாவ்டே கூறியதாவது:

முதற்கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்பட 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உ.பி.யில் 51 தொகுதிகள், மேற்குவங்கம் 20 தொகுதிகள், தெலங்கானாவில் 9 தொகுதிகள், குஜராத்தில் 20 தொகுதிகள், ம.பி.யில் 24 தொகுதிகள், ராஜஸ்தானில் 15 தொகுதிகள், கேரளாவில் 12 தொகுதிகள், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் தலா 11 தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ., தலைமை வெளியிட்டுள்ள பட்டியலின்படி, பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியிலும் அமைச்சர் அமித்ஷா, காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம் பின்வருமாறு:

ராஜ்நாத் சிங் - லக்னோஅமேதி - ஸ்மிருதி இரானிஓம்பிர்லா -கோட்டா தொகுதிசிவராஜ் சிங் சவுகான் - ம.பி., (விதீஷா தொகுதி)மன்சுக் மாண்டவியா - போர்பந்தர் (குஜராத்) அஜய் மிஸ்ரா - லக்கிம்பூர் கேரி (உ.பி) ஜோதிர் ஆதித்யா சிந்தியா - ம.பி (குணா தொகுதி)கிஷன் ரெட்டி - செகந்திராபாத்ராஜீவ் சந்திரசேகர் - திருவனந்தபுரம்நடிகர் சுரேஷ் கோரி - திருச்சூர்அனில் ஆன்டனி - பத்தனம் திட்டாபன்சூரி சுவராஜ் - டெல்லிசர்பானந்த ஷோனாவால் - அசாம் (திப்ரூகர்)கிரண் ரிஜ்ஜூ - அருணாச்சல் பிரதேசம் (மேற்கு தொகுதி) கஜேந்திர செகாவத் - ஜோத்பூர் தொகுதிமனோஜ் திவாரி - வடகிழக்கு டெல்லிமுரளிதரன் - கேரளா (ஆற்றிங்கல்)வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்