நிற்காத விடியல் பஸ் முதல்வரிடம் மகளிர் குமுறல்

தேனி மாவட்ட தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று காலை நடை பயிற்சியாக, தேனி உழவர் சந்தைக்குள் சென்றார். அங்கிருந்த பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

அங்கு கடை எண் 62ல் வியாபாரம் செய்த குள்ளப்புரம் கிராமத்தை சேர்ந்த சித்ரா என்பவர், ஒரு சீப்பு செவ்வாழை பழத்தை முதல்வருக்கு பரிசாக கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட முதல்வர் நன்றி தெரிவித்தார்.
அப்போது அப்பெண், 'நான் தினமும் குள்ளப்புரத்தில் இருந்து பெரியகுளம் வந்து பெரியகுளத்தில் இருந்து தேனி உழவர் சந்தைக்கு வந்து வியாபாரம் செய்கிறேன்.

பெரியகுளத்தில் இருந்து தேனி வருவதற்கு, பேருந்து நிறுத்தங்களில் இலவச பஸ்சை டிரைவர்கள் நிறுத்துவது இல்லை' என புகார் தெரிவித்தார். அதற்கு ஸ்டாலின், 'ஆக் ஷன் எடுக்கிறேன்மா' என உறுதியளித்து சென்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)