பிரதமர் மோடி மீண்டும் 22ல் தமிழகம் வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடி, வரும் 22ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். அவரை, விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் பேச வைக்க, தமிழக பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, லோக்சபாவுக்கு வர வேண்டும் என்பது, பிரதமர் மோடியின் விருப்பம். இதற்காகவே, அவர் அடிக்கடி தமிழகம் வருகிறார்.
ஏற்கனவே பல்லடம், திருநெல்வேலி, துாத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.
இதையடுத்து, மீண்டும் தமிழகத்தில் மூன்று நாட்கள் பிரசாரத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளார். முதலாவதாக, 22ம் தேதி தமிழகம் வருகிறார். எனவே, அவர் இதுவரை செல்லாத விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அடுத்த கட்டமாக, தேனி, திருச்சி, திண்டுக்கல் என, இதுவரை அவர் செல்லாத மாவட்டங்களில், பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புஉள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து