1/100
தமிழ்நாடு தேர்தல் 2021 போட்டோ
இன்றைய காட்சிகள்
2/100
தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டள்ள அருங்காட்சியகத்தை, கல்வித் துறை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர்.
14-ஜன-2023 14:49
3/100
திருப்பூர், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் மாநகராட்சி கவுன்சிலர் புஷ்பலதா குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
23-டிச-2022 10:08
4/100
1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி முகாம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
10-அக்-2022 13:56
5/100
உடுமலை அமராவதி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் நெல் நாற்றுகள் நடவு செய்யப்பட்ட வயல்கள் பசுமையுடன் காணப்படுகின்றன.
11-செப்-2022 14:39
6/100
தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி இணைந்து வழங்கும் உங்களால் முடியும் டி.என்.இ.ஏ., தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்றத்தூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவ ,மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் திரளாக கலந்து கொண்டனர்.
14-ஆக்-2022 12:53
7/100
திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
17-மே-2022 18:02
8/100
திண்டுக்கல் அருகே குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியில் பூத்துள்ள சம்பங்கி பூக்கள்.
17-மே-2022 18:00
9/100
சென்னையில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடல் நீர் மணல் பரப்பில் புகுந்து குளம் போல் தேங்கி நிற்கிறது.இடம் : திருவான்மியூர்.
17-மே-2022 17:56
10/100
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு நடைமுறை தொடர்பாக தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். உடன் இடமிருந்து, தேர்வாணைய உறுப்பினர்கள் பாலுசாமி பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
17-மே-2022 17:55
11/100
ரம்ஜான் தினத்தை முன்னிட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள பார்சி கிளப் மைதானத்தில் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் சார்பாக சிறப்பு தொழுகை நடைபெற்றது.
03-மே-2022 10:48
12/100
விழுப்புரம் சென்னை சாலையில் 10 மணிக்கு மேல் வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
21-மே-2021 12:15
13/100
கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை வரவேற்ற தொண்டர்கள். இடம்: வி.கே.கே., மேனன் ரோட்டிலுள்ள பா.ஜ., அலுவலகம்.
04-மே-2021 11:44
14/100
சென்னை கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இடம் : லயோலா கல்லூரி, சென்னை.
03-மே-2021 09:48
15/100
பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வரான பன்னீர்செல்வத்திற்கு தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி சான்றிதழ் வழங்கினார், அருகில் பார்வையாளர் பெரோல்டு சேவியர், (இடது ஓரம்) ரவீந்திரநாத் எம்.பி. இடம்: தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி.
03-மே-2021 08:48
16/100
சட்டசபை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
02-மே-2021 17:08
17/100
அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி வளாகத்தில், நடந்து வரும் திண்டிவனம் தனி தொகுதி ஓட்டு எண்ணிக்கை, இரண்டாவது சுற்று தொடங்கி முடிந்துள்ளது.
02-மே-2021 11:02
18/100
புதுச்சேரி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
02-மே-2021 09:39
19/100
சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு விருதுநகர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவோருக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது.
02-மே-2021 08:50
20/100
ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ளே செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த முகவர்கள்.
02-மே-2021 08:06
21/100
சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி ஓட்டு எண்ணும் மையம் கொரோனா பரவலை தடுக்க கட்சி முகவர்கள் கடைபிடிக்க சமூக இடைவெளி கோடுகள் வரையபட்டன. இடம்: தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி.
01-மே-2021 16:30
22/100
புதுச்சேரி லாஸ்பேட்டை பெண்கள் பாலிடெக்னிக்கில் வாக்குப்பதிவு என்னும் மையத்தை ஒருங்கிணைப்பு அதிகாரி சுதாகர் பார்வையிட்டார்.
01-மே-2021 16:28
23/100
காலையில் கொடைக்கானல் மலையை தழுவிச் சென்ற வெண்மேக கூட்டம். இடம்: செம்பட்டி- வத்தலக்குண்டு ரோடு.
15-ஏப்-2021 16:57
24/100
போடி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி மாவட்ட தேர்தல் அலுவரிடம் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் மனு அளித்தார். இடம் : தேனி கலெக்டர் அலுவலகம்.
15-ஏப்-2021 16:56
25/100
ஓட்டு பெட்டிகள் பாதுகாக்கப்பட்டு கோவை ஜி.சி.டி., கல்லூரியில் போதிய வசதிகள் ஏற்பாடு செய்யவில்லை என கண்டனம் தெரிவித்த பா.ஜ., வினர்.
10-ஏப்-2021 15:52
26/100
திருச்சி மேற்கு தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் வைத்து, அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில், அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
07-ஏப்-2021 14:49
27/100
திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் சீல் வைப்பதற்கு முன் பார்வையிட்டு ஆய்வு செய்த திண்டிவனம் தனித்தொகுதி தேர்தல் தேர்தல் பார்வையாளர் முகமது கைசர் அப்துல்லா.
07-ஏப்-2021 12:52
28/100
திருப்பூர், எல்.ஆர்.ஜீ கல்லூரியில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஓட்டு பெட்டிகளை பார்வையிட்ட தேர்தல் பார்வையாளர் உமானந்த டோலி மற்றும் அரசியல் கட்சியினர்.
07-ஏப்-2021 12:51
29/100
அரியாங்குப்பம் தொகுதி வீரம் படத்தில் சிங்கார வேலர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அலுவலர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
06-ஏப்-2021 16:24
30/100
புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி ராஜ்பவன் தொகுதியில் சைமன் கத்தினாள் லூர்து பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் வாக்கு பதிவு செய்யத முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஓட்டு போட்டார்.
06-ஏப்-2021 16:21
32/100
கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடியில் வரும் வாக்காளர்களுக்கு தர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
06-ஏப்-2021 15:38
33/100
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் ஆர்வத்துடன் ஓட்டளிக்க வந்த பெண்ணுக்கு அழியாத மை விரலில் வைக்கப்பட்டது.
06-ஏப்-2021 14:57
34/100
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் பிரேமலதா வயலூரில் பேட்டி அளித்தார்.
06-ஏப்-2021 14:39
35/100
திருவாடானை சட்டசபை தொகுதி, ஆர்.எஸ்.மங்கலத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
06-ஏப்-2021 13:22
36/100
புதுச்சேரி தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மையம் வாக்குச்சாவடி மையத்தை முன்னாள் முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
06-ஏப்-2021 13:01
38/100
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி முட்டத்துவயலில், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களிக்க நடந்து சென்றார்.
06-ஏப்-2021 12:02
39/100
நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தள் பகுதியில் ஓட்டுப்போட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.
06-ஏப்-2021 11:34
40/100
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதி ஆமைக்குலம் ஓட்டுச்சாவடியில், ஓட்டு போடுவதற்காக காலை 6:45 மணிக்கு வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.
06-ஏப்-2021 11:32
41/100
கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் கமலஹாசன் கெம்பட்டி காலனி உள்ள மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்கு மையத்தை பார்வையிட்டார்.
06-ஏப்-2021 11:19
43/100
காரைக்குடி டிடி நகரில் உள்ள மகரிஷி பள்ளி ஓட்டுச்சாவடியில் பாஜ., வேட்பாளர் எச். ராஜா ஓட்டளித்தார்.
06-ஏப்-2021 10:07
44/100
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலை கல்லூரி வாக்கு சாவடியில் முதியோருக்கு உதவும் போலீசார் .
06-ஏப்-2021 10:00
45/100
திண்டிவனம் மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், தனது குடும்பத்தினருடன் வந்து ஓட்டளித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
06-ஏப்-2021 09:51
46/100
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ,காமராஜர் மெட்ரிக் பள்ளியில் வாக்களித்தார்
06-ஏப்-2021 09:43
48/100
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை, அண்ணா நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்த தமிழக பா.ஜ., தலைவர் முருகன்.
06-ஏப்-2021 07:29
49/100
சட்டமன்ற தேர்தலை ஒட்டி விழுப்புரம் சட்டசபை . தொகுதிக்கு உட்பட்ட பூத்களுக்கு ஓட்டுப் பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. இடம் : விழுப்புரம் தாலுகா அலுவலகம்
05-ஏப்-2021 15:31
50/100
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிக்கான இயந்திரங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் மேற்பார்வையில் ஓட்டுச்சாவடி களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
05-ஏப்-2021 15:29
51/100
வாகனத்தில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் மின்னணு இயந்திரங்களை ஓட்டுச்சாவடிகளுக்கு எடுத்துச் சென்றனர்.இடம்; உடுமலை.
05-ஏப்-2021 14:17
52/100
போலீஸ் பாதுகாப்புடன் உடுமலை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து ஓட்டு சாவடிகளுக்கு மின்னனு வாக்கு இயந்திரங்களை. வாகனத்தில் ஊழியர்கள் ஏற்றுகின்றனர்.
05-ஏப்-2021 12:27
53/100
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை ஆதரித்து கோவை மரக்கடை அருகே நடிகை ராதிகா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
04-ஏப்-2021 17:30
54/100
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை ஆதரித்து ,கோவை உக்கடத்தில், கட்சி சின்னமான டார்ச் லைட் தலையில் வைத்து பொது மக்களிடம் பிரச்சாரம் செய்த பெண்கள். இடம்: கோவை, உக்கடம்.
04-ஏப்-2021 17:29
55/100
கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராம் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் கொண்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
04-ஏப்-2021 15:30
57/100
துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து மின்ட் தெருவில் பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்.
04-ஏப்-2021 13:36
58/100
தேர்தல் பிரசாரத்திற்கு கடைசி நாளில், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் அ.தி.மு.க., கட்சியினர் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்தனர்.
04-ஏப்-2021 12:12
59/100
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நடிகர் கமலஹாசனுக்கு அவரது மகள் அக்சரா மற்றும் நடிகை சுகாசினி ஆகியோர் ராம்நகர் பகுதியில் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தனர்.
04-ஏப்-2021 11:08
60/100
கோவை குறிச்சி பிரிவு அருகே இட்டேரி பகுதியில் கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி.
04-ஏப்-2021 09:51
61/100
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார்.
03-ஏப்-2021 14:55
62/100
சென்னை, துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் சேகர் பாபுவை உற்சாகமாக வரவேற்ற ஜெயின் சமூகத்தினர். இடம்- திருப்பள்ளி தெரு.
03-ஏப்-2021 13:42
63/100
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் பாதயாத்திரை மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்தார். அருகில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.
03-ஏப்-2021 12:36
64/100
மதுரையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
02-ஏப்-2021 16:29
65/100
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடை வீதியில் நடந்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் .
02-ஏப்-2021 16:10
66/100
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடை வீதியில் நடந்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் .
02-ஏப்-2021 15:13
67/100
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க, வேட்பாளர் பிரேமலதா காய்கறி மார்க்கெட்டில் வாக்கு சேகரித்தார்.
02-ஏப்-2021 13:22
68/100
விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு கிராமத்தில் தி.மு.க., வேட்பாளர் டாக்டர் லட்சுமணனை ஆதரித்து சபாபதி மோகன் பேசினார்.
02-ஏப்-2021 12:55
69/100
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சண்முகத்துக்கு ஆதரவாக 39-வது வார்டு நகர தொழில்நுட்ப பிரிவு தலைவர் பாக்கியலட்சுமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சுமதிபன்னீர்செல்வம், மற்றும் வட்ட செயலர் கவுஸ்பாஷா மற்றும் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
02-ஏப்-2021 11:39
70/100
முதல்வர் பழனிசாமி குன்னூர் வேட்பாளர் வினோத் மற்றும் ஊட்டி வேட்பாளர் போஜாராஜை ஆதரித்து பிராசாரம் செய்தார்.
01-ஏப்-2021 14:33
71/100
பொள்ளாச்சி எஸ்.எஸ்., கோவில் வீதியில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த ஆறு சிலிண்டர், வாஷிங் மெஷின் போன்று வடிவமைக்கப்பட்டு, தள்ளுவண்டியில் வைத்து கொண்டு சென்று நூதன பிரச்சாரம் செய்தனர்.
01-ஏப்-2021 14:22
72/100
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சென்னை அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் சங்கர் ஆதரித்து பிரசாரம் செய்தார். இடம்; அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ.காலனி.
01-ஏப்-2021 12:51
73/100
சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
01-ஏப்-2021 12:35
74/100
சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி மேட்டுப்பாளையம் அண்ணாமலை தெரு பகுதியில் வாக்கு சேகரித்தார்.
01-ஏப்-2021 11:19
75/100
காவலர்களின் தபால் ஓட்டு...தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கான தபால் ஓட்டு போடும் நிகழ்வு நடந்தது. ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தங்களது தபால் ஓட்டினை செலுத்திய காவலர்கள்.
31-மார்-2021 17:15
76/100
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட, திருவள்ளுவர் நகரில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்ய வந்த பா.ஜ. கட்சி வேட்பாளர் வினோஜ் செல்வத்தை பூக்கள் தூவி வரவேற்ற அப்பகுதி மக்கள்.
31-மார்-2021 17:13
77/100
சட்டசபை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சாய்தள படிக்கட்டுகள் சக்கர நாற்காலிகள் வழிகாட்டி பலகைகள் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்தரங்கம் நடந்தது இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் தேர்தல் குறித்து விளம்பர பலகை வைத்திருந்தனர்
31-மார்-2021 17:09
78/100
இந்த பெண்கள் உரிமைக்காக சங்கிலி தொடர் போல் வரிசையில் நிற்பதாக நினைக்க வேண்டாம். வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க கட்சியினரால் அழைத்து வரப்பட்ட வர்களே. இடம்: பெரியூர்.
31-மார்-2021 17:08
79/100
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அ.தி.மு.க., வேட்பாளர் மற்றும் கட்சியினர், புகார் மனு கொடுத்தனர்.
31-மார்-2021 17:05
80/100
கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் நகரப்பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
31-மார்-2021 17:01
81/100
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சோளிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், மீண்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இடம்: மடிப்பாக்கம்.
31-மார்-2021 16:59
82/100
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் குஷ்புவுக்கு தாமரை கொடுத்து வரவேற்ற மக்கள்.இடம்: தி.நகர், தாமஸ் சாலை.
31-மார்-2021 15:56
83/100
திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் ஆர்டிஓ., அலுவலகத்தில் நடந்தது.
31-மார்-2021 15:53
84/100
தேனி மாவட்டம் போடியில் நடந்த தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் படம் அச்சிடப்பட்ட பலூன்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.
31-மார்-2021 15:50
85/100
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுந்தரம் முத்தப்தோப்பு பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
31-மார்-2021 15:48
86/100
சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குஷ்பு தி.நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
31-மார்-2021 15:45
87/100
பொள்ளாச்சி அழகம்மாள் வீதியில், அ.தி.மு.க., வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
31-மார்-2021 15:45
88/100
தாம்பரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி .கே எம். சின்னையாவை மலர்களால் மழைபோல் தூவி வரவேற்ற தொண்டர்கள். இடம். மேற்கு தாம்பரம்.
31-மார்-2021 15:37
89/100
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் செல்வி ராமஜெயம் பச்சகுப்பம் பகுதியில் ஓட்டு சேகரித்தார். அருகில் பா.ம.க மாநில துணை பொது செயலாளர் முத்துகிருஷ்ணன்
31-மார்-2021 15:34
90/100
80 வயதை கடந்தவர்கள் வீட்டில் இருந்தபடியே, தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தஞ்சை சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட மேலவீதியில் 80 வயதைக் கடந்த முதியவரிவிடம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்கள் இருக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் ஓட்டை பெற்றுச் சென்றனர்.
31-மார்-2021 15:26
91/100
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து ராஜ வீதியில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்.
31-மார்-2021 15:24
92/100
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட சவுக்கார் பேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபுவுக்கு தலைப்பாகை கட்டி திலகமிட்டு உற்சாகமாக வரவேற்ற பெண்கள்.
31-மார்-2021 15:23
93/100
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் குஷ்பு வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கினார்.இடம்.தி.நகர், தாமஸ் சாலை.
31-மார்-2021 13:24
94/100
சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில், தேர்தல் நேரத்தில் பணி செய்யும் போலீசார் தங்கள் தபால் ஓட்டுக்களை அளித்தனர்.
31-மார்-2021 11:48
95/100
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் கார்த்திகேயன் விஜய மாநகம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
31-மார்-2021 11:47
96/100
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் தர்ஷன் என்ற ஐந்து வயது சிறுவன் பிளாஸ்டிக் குடம் மீது அமர்ந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
30-மார்-2021 17:53
97/100
தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் முருகன் பிரதமர் மோடியிடம் ஆசி வாங்கினார்.
30-மார்-2021 17:08
98/100
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிஅ.தி.மு.க. வேட்பாளர் செல்வி ராமஜெயத்துக்கு ஆதரவாக அமைச்சர் சம்பத் ஓட்டு சேகரித்தார்
30-மார்-2021 13:47
99/100
துணைராணுவ பாதுகாப்புடன் உடுமலை பழனியாண்டவர்நகரில் தபால் ஓட்டு பதிவு செய்யும் மூதாட்டி.
29-மார்-2021 15:36
30 முரட்டு தொண்டர்கள் !
08-மார்-2021 12:03
39 பிரசாரத்தில் தலைவர்கள் !
08-மார்-2021 10:03
76 போட்டூன்
06-மார்-2021 12:03
30 கார்டூன்ஸ்
08-மார்-2016 17:03