1/76
தமிழ்நாடு தேர்தல் 2021 போட்டோ
போட்டூன்
2/76
ராமநாதபுரத்தில், அ.ம.மு.க., வேட்பாளருக்காக எம்.ஜி.ஆர்., வேடத்தில் பெண்களிடம் ஓட்டு சேகரித்த தொண்டர்.
02-ஏப்-2021 17:50
3/76
சேலம், தாதகாப்பட்டியில், தெற்கு தொகுதி, தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலர் உதயநிதி, பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ஒரு சிறுமி, தி.மு.க., குறித்து கவிதை வாசிக்க அதை பாராட்டி, சால்வை போட்டு முத்தம் கொடுத்த உதயநிதி.
02-ஏப்-2021 17:50
4/76
விருவிரு மாண்டி... விருமாண்டி... கமலுக்கு ஒரு வரவேற்பு. இடம்: கோவை, மருதூர்.
02-ஏப்-2021 17:49
5/76
திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நடராஜனுக்கு ஆதரவாக, அவரது பேத்தி சாய் மித்ரா, ஜெயலலிதா போல உடை அணிந்து ஓட்டு சேகரித்தார்.
02-ஏப்-2021 17:48
6/76
சென்னை வில்லிவாக்கம், திரு.வி.க.,நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்திற்கு, தாமதமாக ஓடி வந்த அவரது கட்சி வேட்பாளர் இலவஞ்சி. இடம்: ஓட்டேரி, சென்னை.
02-ஏப்-2021 17:48
7/76
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா ராமநத்தத்தில் பிரசாரம் செய்தார்.
02-ஏப்-2021 17:47
8/76
கரூர் அருகே, கிருஷ்ணராயபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு(ஏப்.,1) டிபன் சாப்பிட்டார். அருகில், பா.ஜ., தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி உள்ளிட்ட நிர்வாகிகள்.
02-ஏப்-2021 17:47
9/76
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறையில் கடையில் வடை சுட்டு ஓட்டு சேகரித்த, தே.மு.தி.க., வேட்பாளர் ராஜேந்திரன்.
01-ஏப்-2021 17:59
10/76
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில், விசில் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நடிகர் மயில்சாமி நேற்று பெரிய விசிலுடன் கோயம்பேடு பகுதியில் பிரசாரம் செய்தார்.
01-ஏப்-2021 17:58
11/76
சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி கட்டடத்தில் மெகா சைசில் பறக்க விடப்பட்ட பலூன்.
01-ஏப்-2021 17:58
12/76
பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்.
01-ஏப்-2021 17:58
13/76
கடவுள் மறுப்பு கொள்கை உடைய, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கோவை பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்.
01-ஏப்-2021 17:57
14/76
தேனி மாவட்டம், போடி தொகுதியில் நடந்த, அ.தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டத்தில், எம்.ஜி.ஆர்., போல வேடமிட்டு வந்த நபரை பார்த்ததும், அவருடன் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மூதாட்டி
01-ஏப்-2021 17:57
15/76
அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினால் அபராதம் என்பதால், சுவர்களில் போஸ்டர்களை காண்பதே அரிதாக உள்ளது. திண்டுக்கல்லில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் அமைச்சர் சீனிவாசனை ஆதரித்து, இளைஞர் ஒருவர் முதுகில், 'விளம்பர டிஸ்பிளே போர்டை' சுமந்தபடி மாலை நேர பிரசாரத்தின் போது நகரில் வலம் வருகிறார்.
01-ஏப்-2021 17:56
16/76
சிவகங்கை தொகுதி காளையார்கோயில் பகுதியில் பிரசாரத்திற்கு வரும் வேட்பாளருக்காக, ஆரத்தி தட்டுடன் காத்திருந்த பெண்கள்.
01-ஏப்-2021 17:55
17/76
மதுரையில் ஏப்.,2ல் பிரதமர் மோடி பங்கேற்கும், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.அந்த இடத்தை பார்வையிட வந்த, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சும் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கும் இருக்கையில் அமரும்படி பரஸ்பரம் அழைப்பு விடுத்து கொண்டனர்.
01-ஏப்-2021 17:55
18/76
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரசாரம் செய்ய, முதல்வர் இ.பி.எஸ்., வரும் முன் கூட்டம், திரட்டுவதற்காக திறந்தவெளி மேடையில் குத்தாட்டம் போட்ட நடன கலைஞர்கள்.
27-மார்-2021 17:28
19/76
தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்த கூடாது னெ்ற விதியை கடைபிடிக்காமல், முதுகுளத்தூர் சட்டசபை தொகுதி வேட்பாளரின் பிரசாரத்திற்காக வந்த, உதயநிதியை வரவேற்பதற்காக, சாயல்குடியில், தி.மு.க., கொடியுடன் சிறுவர்கள்
27-மார்-2021 17:28
20/76
தி.மு.க., சார்பில் சென்னை சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடும், மா.சுப்பிரமணியன் மற்றும் பிரபாகர் ராஜா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக பூ தூவி வரவேற்ற தொண்டர்கள்.
27-மார்-2021 17:27
21/76
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த, பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அங்குள்ள கோடீஸ்வரர் நகர் கோவிலில் வழிபாடு செய்து, கோவில் யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.
27-மார்-2021 17:27
22/76
ஓட்டு தானே கேட்டிருப்பார், அ.தி.மு.க., வேட்பாளர் தளவாய் சுந்தரம்... பாட்டி இப்படி வெட்கப்படுறாங்களே... இடம்: கன்னியாகுமரி
26-மார்-2021 16:18
23/76
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்த நடிகை நமீதா
26-மார்-2021 16:17
24/76
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீ பிரியா,பல்வேறு காரணங்களால் ஓட்டு சேகரிக்க வரவில்லை. இதனால், எனது தோழிக்கு நான் வாக்கு சேகரிக்கிறேன் என களமிறங்கிய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த ராதிகா, பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில், ‛டார்ச்லைட்' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, ஸ்ரீபிரியாவின் கட் அவுட்டை தூக்கிக் கொண்டு வந்த தொண்டர். இடம்: சீனிவாசபுரம்.
26-மார்-2021 16:14
25/76
தேனி மாவட்டம் போடியில், இஸ்திரி பெட்டியால் சட்டை தேய்த்து கொடுத்து தொழிலாளியிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட, தி.மு.க., வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன்.
26-மார்-2021 16:14
26/76
தேர்தல் பிரசாரத்திற்கு கூட்டம் சேர்ப்பது, கட்சியினருக்கு சவாலாக உள்ளது. இதில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் வேடிக்கை காட்டிம க்களை கூட்டுவதில் கைதேர்ந்த கட்சிகள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், பிரசாரம் செய்ய முதல்வர் இ.பி.எஸ்., வரும் முன் கூட்டம் சேர்க்க, கட்சி பார்டருடன் வெள்ளை சேலையில், ஆரம்ப கால ஜெயலலிதா போல் வேடமிட்டு வந்த பெண், கூட்டத்தினர் மத்தியில் பேசினார்.
26-மார்-2021 16:13
27/76
'சரக்கு பாட்டில் சின்னத்தில் தான் தேர்தலில் நிற்பேன்'னு அடம் பிடித்த, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியனுக்கு சென்னை அம்பத்துார், சாத்துார் தொகுதிக்கு செருப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கு. 'சரக்கு இல்லாட்டி செருப்பு, இதோ பிரசாரத்திற்கு கிளம்பிட்டோம்'ல என, 'மெகா சைஸ்' செருப்புடன் அம்பத்துார் வேட்பாளர் ஆறுமுகத்துடன் பந்தாவாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த செல்லப்பாண்டியன்..
26-மார்-2021 16:08
28/76
திருமங்கலம் தொகுதி, 'மை இந்தியா பார்ட்டி' வேட்பாளர் நிர்மல், 'போர்டபிள் ஸ்பீக்கர், மைக்'கும் கையுமா நடந்தே பிரசாரம் பண்ணிட்டு இருக்காரு. டெக்னாலஜி தெரிஞ்சவரா இருப்பார் போல...
26-மார்-2021 16:07
29/76
திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும், அமைச்சர் உதயகுமார், பிரசார இடைவெளியில், புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு தண்ணீர் அடித்தார்.
26-மார்-2021 16:07
30/76
புதுப்புது வாகனங்கள் வந்தாலும், பா.ஜ., வேட்பாளராக ஓட்டு வேட்டைக்கு செல்ல, அ.தி.மு.க., காலத்து பைக் தான் லாவகமாக இருக்கிறதாம், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு. இடம்: திருநெல்வேலி
24-மார்-2021 11:03
31/76
தேர்தல் வந்துட்டா போதும்... மடங்காத மகுடமும் இல்லை... வணங்காத முடியம் இல்லை.எந்த வேட்பாளருக்கும் எத்தகைய பணிவும் வந்துவிடும். வேடசந்தூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் பரமசிவம், ஆரத்தி எடுத்த சிறு குழந்தையிடம் பணிவுகாட்டி அதன் நெற்றியில் பொட்டு வைத்து பொது மக்களை கவர்ந்தார்.
24-மார்-2021 11:03
32/76
திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் பிரசாரம் செய்த பகுதியில், எம்.ஜி.ஆரை போல வேடமிட்டவர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது
24-மார்-2021 11:02
33/76
தடை... அதை உடை! பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால், சின்ன, சின்ன இடைஞ்சல்கள் இருக்கத்தானே செய்யும், அதை தாண்டி சென்றால் தானே, நினைத்தது நடக்கும். கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரசாரத்தின் போது...!
23-மார்-2021 12:58
34/76
‛வலிமை' அப்டேட் பத்தி சொல்லுங்கன்னு தான் பரவலான பேச்சு. ஆள்காட்டி விரலில் வைக்கும் ‛மை' தான் எப்போதைக்கும் ‛வலிமை' என்பது தான் அப்டேட். பொள்ளாச்சி, சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்லூரி மாணவியர்.
23-மார்-2021 12:57
35/76
அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக, தலைகீழாக நடந்து, காரை இழுத்து, வழக்க வைத்த யோகா ஆசிரியர் சத்திரபதி.
23-மார்-2021 12:57
36/76
‛வாத்தியார்' கம்மிங்...! தேர்தலில் வந்து விட்டாலே, காலத்தால் அழியாதவரின் ஒப்பனைக்கு நிச்சயம் இடம் உண்டு. இந்த முறையும், ‛நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற' என்ற பாடலுடன், அந்த கால நினைவுக்கு அழைத்து சென்றார், இந்த கலைஞர் இடம்: கோவை புதூர்
23-மார்-2021 12:57
37/76
சமையலறை பந்தம்...! குக்கர் இல்லை என்றால், சமயைலே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இனி, ‛விசில்'அடிக்கப்போற காலம் வெகு தூரத்தில் இல்லை என்று, புளகாகிதம் அடையும் தொண்டர்கள், சிங்காநல்லூர் வேட்பாளர் செல்வாவுடன் கையில் குக்கர் சகிதமாக செல்கின்றனர்.
23-மார்-2021 12:56
38/76
துாத்துக்குடியில், தி.மு.க., வேட்பாளர் கீதாஜீவனுக்கு ஆதரவாக ஸ்டாலின் நிழல் பந்தலின் கீழ் இருந்து பிரசாரம் செய்ய, மக்கள் வெயிலில் நின்று கேட்டனர்.
23-மார்-2021 12:48
39/76
சட்டசபை தேர்தலில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கையுறை அணிந்து ஓட்டளிக்க வலியுறுத்தி, தேனி கலெக்டர் அலுவலகத்தில் வரையப்பட்டுள்ள, விழிப்புணர்வு படம்.
23-மார்-2021 12:48
40/76
திருச்சி மேற்கில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் நேருவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்கள், அவரது படம் போட்ட முக கவசம் அணிந்திருந்தனர். கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணியுங்கன்னு சொன்னது, இந்த முக கவசத்திற்கு இல்லீங்கோ.
23-மார்-2021 12:48
41/76
சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளி குழுமம் மற்றும் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில், சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவியர்.
21-மார்-2021 15:49
42/76
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக திருநெல்வேலியில் காங்., கமிட்டி அலுவலகம் முன்புஇருந்த இந்திரா, காமராஜ் சிலைகளை மூடிவிட்டனர். பின்னர் ஒரு கட்சியின் போராட்டத்திற்கு பிறகு காமராஜ் சிலையை மடடும் திறந்துள்ளனர். இந்திரா சிலை திறக்கப்படவில்லை. அவர் என்ன பாவம் செய்தார்.
21-மார்-2021 15:49
43/76
திருநெல்வேலியில், 'டாஸ்மாக்' கடை வாசலில் கூடி நிற்கும் அ.தி.மு.க.,வினர் மதுக்கடைக்கு எதிராகவோ, ஆதரவாகவோ போராட்டம் நடத்தவில்லை. பிரசாரத்திற்கு வந்த நடிகை விந்தியாவை வரவேற்பதற்காக இப்படி அணிவகுத்து நின்றனர்.
21-மார்-2021 15:48
44/76
தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பில் அரியலூர் தொகுதியில் போட்டியிடும், அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம், டிபாசிட் தொகை்காக பொது மக்களிடம் மடியேந்தி வசூல் செய்த, 10 ஆயிரத்தை தன் சின்னமான பானையில் கொண்டு வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
16-மார்-2021 16:11
45/76
இவரை பார்த்ததும், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய வந்த மருத்துவரோ என நினைத்து விட வேண்டாம். சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட புதிய தலைமுறை மக்கள் கட்சியின் சார்பில் மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் அசோக்குமார். இடம்: அயனாவரம்
16-மார்-2021 16:11
46/76
இது அடையாளமோ? ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில், மனுத்தாக்கல் செய்ய, ஏர் கலப்பையுடன் வந்த, சுயேச்சை வேட்பாளர்கோவணம் தங்கவேல்.
13-மார்-2021 18:01
47/76
உறுதி ஏற்றால் போதாது... ஓட்டுப் போடுங்க...!சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என அரசு சார்பில், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இடம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்.
13-மார்-2021 18:01
48/76
இன்னும் சில நாட்களுக்கு இந்த ஆட்டம் பாட்டம்தான்...!சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சேலம், மாவட்டம், வாழப்பாடியில், ஏற்காடு தொகுதி வேட்பாளர் சித்ராவை ஆதரித்து முதல்வர் இ.பி.எஸ்., நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரின் பிரசாரம் துவங்கும் முன், கட்சியினர் வழங்கிய கவனிப்புக்கு வஞ்சகம் செய்யாமல் ஆடி பாடிய பாட்டிகள்.
13-மார்-2021 18:01
49/76
இதுதான் தீவிர விசுவாசமோ...!சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று நடந்த அ.ம.மு.க., கூட்டத்திற்கு வந்த தொண்டர்.
13-மார்-2021 18:01
50/76
பலாப்பழம் யாருக்கு? திருப்பூர் வடக்கு தொகுதிக்கு பலாப்பழத்துடன் மனு தாக்கல் செய்ய வந்த, அண்ணா புரட்சித் தலைவர் அம்மா தி.மு.க.,வின் செந்தில்குமார்.
13-மார்-2021 18:00
51/76
திருந்த மாட்டாங்க...: சிவகங்கையில், அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன் வரவேற்பு நிகழ்ச்சியில், சிலம்பு சுற்றிய சிறுவர்கள்.
13-மார்-2021 18:00
52/76
தேர்தல் வந்தால் இது போன்ற காட்சிகள் ஏராளம் : கருணாநிதி போல் வேடம் அணிந்து, கட்சியினரை உற்சாகப்படுத்திய தொண்டர். இடம்: சென்னை, அண்ணா அறிவாலயம்.
12-மார்-2021 14:54
53/76
மறக்காம ஓட்டுப்போட வாங்க...: ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து, தேர்தல் கமிஷன், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சென்னை, பெரம்பூரில், ஆசிரியர்கள், தட்டு, தாம்பூலம், பழங்களுடன் வீடு வீடாக சென்று, 'ஓட்டுப்போட வாங்க' என்று, அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்தனர்.
12-மார்-2021 14:54
54/76
நான் ரெடி... நீங்க ரெடியா...:சென்னை, கோயம்பேடில் உள்ள, பா.ஜ., தேர்தல் அலுவலகத்தில், தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனம்.
12-மார்-2021 14:53
55/76
அருமையோ அருமை...: 'வாக்களிப்பது நம் கடமை' என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள, 'மெகா சைஸ்' பேனர். இடம்: தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம்.
12-மார்-2021 14:53
56/76
தேர்தல் அதிகாரி: தபால் ஓட்டுப்போட விருப்பமா? பாட்டி: தபால் சின்னத்துலேயே போடுறேன். எவ்வளவு காசு தருவீங்க? தேர்தல் அதிகாரி புலம்பிய இடம்: சன்னியாசிகுண்டு, சேலம்.
11-மார்-2021 16:16
57/76
துவார பாலகர்கள்: தொகுதி பங்கீடு பேச்சு நடைபெற்ற, அ.தி.மு.க., தலைமை அலுவலக வாசலில் துவாரபாலகர்கள் போல் நிற்கும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி. தேவையில்லாதவர்கள், இவர்களைத் தாண்டி உள்ளே செல்வது கடினம்.
11-மார்-2021 16:15
58/76
மீசைக்கார நண்பா: ஒவ்வொரு கட்சியிலும் இரண்டு மூன்று தலைமுறை தலைவர்களை பார்த்த தொண்டர்கள் இருப்பர். அவர்கள் கடைசி வரை தொண்டர்களாகவே இருப்பர். சென்னை அறிவாலயம் வாசலில் பெரிய மீசையுடன் தன் அபிமான தலைவரின் படத்தை பிடித்தபடி நின்ற பெரியவர்.
11-மார்-2021 16:15
59/76
இந்த மாதிரி போர்டு, தமிழகத்தில் வீட்டுக்கு வீடு தொங்கினால் எப்படி இருக்கும். இடம்: புதுப்பாளையம், கடலூர்.
10-மார்-2021 13:17
60/76
அம்மா என்பதும் அரசியல் வார்த்தையா: சென்னையில் சமீபத்தில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கில் அம்மா என்ற வார்த்தை மறைக்கப்பட்டு வருகிறது. அம்மா என்றால் அன்பு என்று தான் நினைத்து இருந்தோம். தேர்தல் கமிஷன் பார்வையில் அதுவும் அரசியல் வார்த்தையாகி விட்டது போலும்
08-மார்-2021 01:05
61/76
இதுவும் குறைஞ்ச எண்ணிக்கையா இருக்கே: தி.மு.க., ஒதுக்கீடு செய்யும் சீட்கள் நினைத்ததை விட குறைவாக இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் செய்த குறைந்த எண்ணிக்கையிலான தொண்டர்கள்.
06-மார்-2021 23:17
62/76
இப்படித்தான் ஓட்டு போடனும்: நீலகிரி மாவட்டம் கூடலூர் சளிவயல் அருகே பழங்குடி கிராமத்தில் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஓட்டளிப்பது குறித்து பழங்குடியினருக்கு அவர்களின் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பயிற்சி அளித்த வருவாய்துறையினர்.
06-மார்-2021 23:16
63/76
ஆசிர்வாதம் செய்யுங்க...: சென்னையில் நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பன்னீர்செல்வம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற தொண்டர்.
06-மார்-2021 23:15
64/76
ஸ்கூல் தான் கிடையாதுல்ல வா பேரணிக்கு: தேர்தல் கமிஷன் என்னதான் விதிமுறைகளை அறிவித்தாலும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மீறுவது அரசியல் கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது. சென்னையில் பா.ஜ., நடத்திய பேரணியில் பங்கேற்ற இளம் தொண்டர்கள்
06-மார்-2021 23:15
65/76
நல்ல காலம் பிறக்குது...நல்ல காலம் பிறக்குது...: அதிகாலையில் வீடுகளுக்கு முன் நின்று குடுகுடுப்பை ஒலி எழுப்பி குறி சொல்லும் குடுகுடுப்பை காரர்கள் வார்த்தை பலிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கைப்படி குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு நல்லகாலம் பிறக்குது... நல்ல காலம்பிறக்குது என்று நூதன தேர்தல் பிரசாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட இந்திய கம்யூ., கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இடம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடம்.
06-மார்-2021 23:14
66/76
நாங்களும் மீறுவோம்ல...: திராவிட கட்சிகளுக்கு போட்டியாக நாங்களும் விதிகளை மீறுவோம்ல, என்ற விதமாக பா.ஜ.,வண்ணத்தில் எழுதப்பட்டுள்ள வாகன எண் மற்றும் தாமரை சின்னம். இடம்: சிங்கம்புணரி ,சிவகங்கை மாவட்டம்
06-மார்-2021 23:13
67/76
தலையில் இலை வைக்கலாமா? இவர் போன்ற தொண்டர்கள் தான் திராவிட கட்சிகளுக்கு பலமே. தலைமுடியை இரட்டை இலை வடிவில் வெட்டி வடிவமைத்ததுடன் நிற்காமல், அதற்கு இலையின் நிறத்திற்கு பெயின்ட் வேறு பூசியுள்ளார்.
06-மார்-2021 12:33
68/76
எப்படி? முன் எச்சரிக்கை!கோவை சிவானந்த காலனியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி பேசினார். கொரோனா பயத்தால், ‛மைக்கில் மாஸ்க்' கட்டி பேசினார்.
06-மார்-2021 12:32
69/76
வாக்களிக்க அழைப்பிதழ்: சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திருமண பத்திரிகை போன்ற அழைப்பிதழை, ‛வாட்ஸ் ஆப்', வாயிலாக வெளியிட்டு, தேர்தல் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
06-மார்-2021 12:32
70/76
தேர்தல் முடியும் வரை இந்த அமர்க்களம் தான்...! நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராசில், ஈ.வெ.ராமசாமி நூற்றாண்டு நினைவுத்தூண் பகுதியில் கட்டப்பட்டுள்ள பா.ஜ., கொடிகள்.
06-மார்-2021 12:31
71/76
ரொம்பத்தான் கெடுபிடிப்பா? நேர்காணலில் பங்கேற்க வந்தவர்களை தீவிர சோதனை செய்து, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர்.
06-மார்-2021 12:31
72/76
எதுக்குங்க ஸ்கூல் பேக்? ஹரியானா மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த கன்டெய்னரில் ஜெயலலிதா மற்றும் இ.பி.எஸ்., படம் பொறிக்கப்பட்ட, ‛ஸ்கூல் பேக்' பண்டல்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
06-மார்-2021 12:30
73/76
ஞாபகம் வருதே: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை தாங்க முடியாத டிரைவர், ஆட்டோவின் பின்னால் எழுதி வைத்துள்ள மனக்குமுறல்
06-மார்-2021 12:30
74/76
முகத்தை மறந்தாலும் முகக்கவசத்தை...தி.மு.க., நேர்காணலுக்கு வந்தவர் கட்சி கொடி வண்ணத்தில் அணிந்திருந்த முக கவசம்.
06-மார்-2021 12:28
75/76
பறையிசை முழங்கட்டும்: கமல்ஹாசன் பேசுவதற்கு முன்பாக சென்னை மேடையில் பறையிசை முழக்கம் இடம்பெற்றது. கொரோனாவால் வாழ்விழந்த கலைஞர்களுக்கு கமல் என்ற கலைஞர், இப்படி வாழ்வு கொடுத்தது சந்தோஷம் தான்.
06-மார்-2021 12:28
100 இன்றைய காட்சிகள்
15-மார்-2021 12:03
30 முரட்டு தொண்டர்கள் !
08-மார்-2021 12:03
39 பிரசாரத்தில் தலைவர்கள் !
08-மார்-2021 10:03
30 கார்டூன்ஸ்
08-மார்-2016 17:03