'ஆரத்தியால் நெற்றியே வெந்து விட்டது தாயி'

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வடுகபட்டியில் கரூர் அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், பிரசாரத்திற்கு சென்றார். அங்கு ஆரத்தி தட்டுகளுடன் வரிசையில் காத்திருந்த பெண்கள், வேட்பாளருக்கு திலகமிட்டு வரவேற்றனர். பல ஊர்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால் ஒரு சில பெண்களின் திலகமிடுதலை மட்டும் ஏற்று கொண்டு வேகமாக கடந்து சென்றார் வேட்பாளர்.
அப்போது ஒரு பெண், 'இதற்காக தானே மணிக்கணக்கில் காத்திருக்கிறோம்' என வருத்தத்தை வெளிப்படுத்தினார். அப்பெண்ணை சமாதானம் செய்யும் வகையில், அவரது கையை பிடித்து கொண்ட வேட்பாளர், 'தாயி,செல்லுமிடம் எல்லாம் சுண்ணாம்பு கலந்த இந்த ஆரத்தி திலகமிடலால் என் நெற்றியே வெந்து விட்டது. அதுதான் காரணம். தப்பா நினச்சுடாதீங்க' என கூறியபடி நகர்ந்தார். அந்தப் பெண்ணும் சிரித்துக் கொண்டே வழியனுப்பினார்.
வாசகர் கருத்து