சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் 'மறத்தமிழர்'
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு விஷயத்தையும் மாற்றி பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
சீமான், அக்கட்சியின் பிரசார பீரங்கியாக உள்ளார். அவரது பேச்சு இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகம் சென்று சேர்ந்து வருகிறது. அதேநேரத்தில் அவர் பேச்சை மாற்றி மாற்றி பேசுவது கடும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
அந்த வகையில், கரும்பு விவசாயி சின்னம் விவகாரத்தில் முதலில் பா.ஜ., தலைமையை கடுமையாக விமர்சித்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டினார்.
'கரும்பு விவசாயி சின்னத்தை நான் தான் வடிவமைத்தேன்' என்றார். இதைத் தொடர்ந்து மைக் சின்னத்தை தேர்தல் கமிஷன் அவருக்கு வழங்கியுள்ளது. 'நாங்கள் கேட்ட ஆட்டோ, தீக்குச்சி, தென்னை மரம் சின்னங்களை தேர்தல் கமிஷன் வழங்கவில்லை. கேட்காத மைக் சின்னத்தை வழங்கியுள்ளது' எனக்கூறி வழக்கு தொடர்ந்தார்.
வேறு சின்னம் கிடைக்காத நிலையில்,'எனக்கு என்ன சின்னம் நன்றாக இருக்கும் என்பதை அறிந்து தேர்தல் கமிஷன் வழங்கியதாக பெருமிதப்பட்டுக் கொண்டார். ஆங்கிலம் பேசுவதை தவிர்த்து வரும் சீமான், மைக் சின்னத்தை ஒலிவாங்கி என்று தான் அழைக்க வேண்டும்.
ஆனால், சின்னத்தை மக்களிடம் எளிதாக கொண்டு செல்வதற்கு, மைக் என்று ஆங்கிலத்தில் கூறத் துவங்கியுள்ளார். தமிழ், ஆங்கிலம் கலந்து பேசினால் செருப்பால் அடிப்பேன் என்று முன்பு கூறிவந்தார். தமிழ் தெரியாதவர்கள், இங்கு இருக்க வேண்டாம் என்றும் மேடைகளில் முழங்கினார்.
ஆனால், தமிழ் படிக்க தெரியாத வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
இவ்வாறு மாற்றி மாற்றி சீமான் பேசுவது கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.
வாசகர் கருத்து