திருக்கோவிலுாரில் களம் இறங்கும் வாரிசு?
திருக்கோவிலுார் தொகுதியில் வாரிசு களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை பொன்முடி இழந்தார்.
அவர் போட்டியிட்ட திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து திருக்கோவிலுார் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என, வாக்காளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வுடன், திருக்கோவிலுார் தொகுதி வேட்பாளர் குறித்தும் தி.மு.க., தலைமை பரிசீலித்து வருகிறது. திருக்கோவிலுார் தொகுதியில், பொன்முடி தன் மகனை களமிறக்க திட்டமிட்டுஉள்ளார்.
பொன்முடியின் மூத்த மகன் கவுதம சிகாமணி தற்போது கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இதனால், பொன்முடியின் இளைய மகன் அசோக் சிகாமணிக்கு 'சீட்' கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாககட்சியினர் கூறினர்.
வாசகர் கருத்து