Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 பொய்யை அவிழ்த்து விடுகிறார்: மோடி மீது ஸ்டாலின் விமர்சனம்

 பொய்யை அவிழ்த்து விடுகிறார்: மோடி மீது ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ''தி.மு.க., ஆட்சி அமைப்பது, கானல் நீராக இருக்கும் என பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க கனவு காண்பது தான், கானல் நீராக இருக்கும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் ஆங்கில வார இதழ் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில், எல்லா துறைகளிலும், 'ஆல் ரவுண்டர்' ஆக உயர்ந்து இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில், 'நம்பர் 1' மாநிலம் என தமிழகத்தை, மத்திய பா.ஜ., அரசே பாராட்டி இருக்கிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கூட, இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியாது.

அவர்கள் செய்வதெல்லாம் வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்குவாதம்; இதற்கு நேர்மறையான முற்போக்கு அரசாக தி.மு.க., ஆட்சி உள்ளது. மத்திய அரசின் உதவி இல்லாமல், அவர்களின் நெருக்கடிகளை மீறி சாதித்து இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் சொல்லும் குறைகளையும் காது கொடுத்து கேட்டு, அதை சரி செய்கிறோம்.

மதுரை வந்த பிரதமர் மோடி, சென்னை மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணிகள் குறித்து குற்றம் சாட்டியிருக்கிறார்.

அவர் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க., தான், இந்த திட்டம் வரக்கூடாது என்று தடை செய்தது. நாங்கள் வந்து மத்திய அரசிடம் சொல்லி, இப்போது தான் அந்த பணிகள் நடக்கின்றன.

தன்னால் குறிப்பிட்டு சொல்ல சாதனைகள் இல்லாததால், தேர்தல் நேரத்தில் பொய்யை, மோடி அவிழ்த்து விட்டு இருக்கிறார். இதை விட பெரிய காமெடியும் அந்த மேடையில் அரங்கேறியது.

'அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்' என பழனிசாமி சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக் கொண்டே, 'தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்' என பிரதமர் மோடி சொல்கிறார்.

யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் தான், அவர்கள் கூட்டணி இருக்கிறது. ஆனால், தி.மு.க., கூட்டணி என்பது எண்ணிக்கையில் அமைந்தது அல்ல; எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி.

பல கட்சிகள் புதிதாக இணைந்துள்ளன; இன்னும் இணைய இருக்கின்றன. அதனால், இதை நான் சவாலாக கருதவில்லை; கொள்கை கூட்டணியாக நாங்கள் கொண்டு செல்கிறோம்.

தி.மு.க., ஆட்சி அமைப்பது, கானல் நீராக இருக்கும் என மோடி சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க, பிரதமர் கனவு காண்பது தான் கானல் நீராக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 04, 2026 05:28 am

சோன முத்தா நீ சொல்லாத பொய்யாடா மத்தவங்க சொல்லிட்டாங்க...

Reply Rate this

உங்களை போன்ற supreme leader உண்டா ?

Reply Rate this
மார் 03, 2026 05:49 pm

ஆங்கில இதழுக்கு பேட்டியா? நம்ப முடியவில்லையே.

Reply Rate this
மார் 03, 2026 01:01 pm

திமுக எவ்வளவு பொய்யான கட்சி என்று பாரதம் முழுக்கத் தெரியும்

Reply Rate this
மார் 03, 2026 12:50 pm

அடேங்கப்பா

Reply Rate this
மார் 03, 2026 12:37 pm

பொது மக்களுக்கு கானல் நீர் லிஸ்ட் பெருசா இருக்கு.‌ அதுல ரெண்டு மூணு மட்டும் சொல்றேன். 1. நீட் தேர்வு ரத்து. 2. காஸ் சிலிண்டர் ரூ 500 3. பெட்ரோல் டீசல் ரூ 75. இவிங்க ஆட்சியே காணாம போகப் போகுது. அதோட சேர்ந்து அத்தனை கானல் நீரும் காணாம போகட்டும். ஆக்டர் விஜய் தான் கானல் நீரைப் பற்றி பப்ளிக் கில் போட்டு உடைச்சாரு. அதுக்கு ஒரு பயலும் பதிலே சொல்லலை சொல்ல முடியலை.

Reply Rate this
மார் 03, 2026 11:47 am

65 வருடங்களுக்கும் மேலாக தமிழகம் பார்க்காத திருட்டு திராவிஷ உருட்டுக்களா? புளுகு மூட்டைகளா? வவிஞ்ஞான ஊழல், அராஜக அட்டூழியங்களா?? திமுக என்றாலே புளுகு, பித்தலாட்டம்... அராஜகம், அட்டூழியம், போலி நாடகங்கள், குடும்ப ஆட்சி, கோபாலபுரம் குடும்பமே கட்சி... அறிவாலயம் கொத்தடிமைகள் கூடாரம்... திமுகவின் பித்தலாட்டங்களைப் பற்றி பல புத்தகங்கள் எழுதலாம்...

Reply Rate this
மார் 03, 2026 11:47 am

சட்ட சபையிலேயே பொய்யை மூட்டையை அவிழ்த்துவிடும் ஒருவர் இப்படி அடுத்தவரை பற்றி வெட்கமின்றி பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். ஸ்டாலின் ஸ் மோர் டேஞ்சரஸ் தேன் கருணாநிதி என்பது உண்மை.

Reply Rate this
மார் 03, 2026 11:35 am

திராவிடத்தின் காப்புரிமையை மீறுகிறார் என்று உணச்சிவசப்படுகிறாரோ இந்த ஒழுக்க சீலர்

Reply Rate this
மார் 03, 2026 10:43 am

திமுகவினருக்கு மட்டுமே உரிய, பொய், புளுகு, பித்தலாட்டம், களவாணிதனம் கேப்மாரிதனம், மொள்ளமாறிதனம் போன்றவை வேறு யாருக்கும் சொந்தமில்லை. திமுகவினர் தான் ஏக போக உரிமையாளர்கள்.

Reply Rate this