Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


மார்ச் 8ல் த.வெ.க., தேர்தல் அறிக்கை

மார்ச் 8ல் த.வெ.க., தேர்தல் அறிக்கை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: த.வெ.க., சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய, அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலர் அருண்ராஜ் தலைமையில், 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பெற்று, தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது.
அதேபோல், இணையதளம் வழியாகவும் கோரிக்கைகள் பெறப்படுகின்றன. இந்நிலையில், வரும் 8ம் தேதி, த.வெ.க.,வின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட ஏற்பாடு நடக்கிறது.
இந்த அறிக்கையில், இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில், 10 வாக்குறுதிகள், இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், த.வெ.க.,வின் முழு தேர்தல் அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி, இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

மார் 04, 2026 09:21 am

இவரு வேற குறுக்க வந்து அப்பப்ப காமெடி பண்ணிக்கிட்டு?

Reply Rate this
மார் 04, 2026 08:59 am

உண்மையிலேயே நாட்டுப்பற்று இருந்தால் வறட்டு கவுரவம் பார்க்காமல் பதவியும் எதிர்பார்க்காமல் உடனடியாக தே.ஜ.கூ ட்டணியில் சேருங்கள்.உங்களுக்கும் கட்சிக்கும் நல்லது.

Reply Rate this
மார் 04, 2026 07:09 am

திமுக, அதிமுக, தவேக என்று அனைவரும் சலுகைகள் தருகிறீர்கள். ஆண்களுக்கும் ஏதாவது தாருங்கள். எங்களுக்கும் வோட் உண்டு.

Reply Rate this
மார் 04, 2026 05:26 am

நல்ல முகூர்த்த நாள் பார்த்து தேர்தல் அறிவிப்பு

Reply Rate this