தி.மு.க., கூட்டணி வேண்டாம்: ம.தி.மு.க., நிர்வாகி வலியுறுத்தல்
சென்னை : 'தொகுதிகளை குறைத்து கொடுத்தால், தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என, ம.தி.மு.க., சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் மணிகண்டன், சமூக வலைதளம் வழியே வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க., ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் அரியலுார், மதுரை தெற்கு, வாசுதேவநல்லுார், சாத்துார் ஆகிய தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
வரும் சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' ம.தி.மு.க., தரப்பில், தி.மு.க., கூட்டணியில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., தரப்பில், ராஜ்யசபா 'சீட்' கிடையாது; சட்டசபை தொகுதிகள் நான்கு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அதிருப்தி அடைந்துள்ளார்.
இந்நிலையில், ம.தி.மு.க., சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: புதிதாக தி.மு.க., கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க., - ம.நீ.ம., போன்ற கட்சிகளுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை கொடுத்தனர். ம.தி.மு.க.,விற்கு கைவிரித்து விட்டனர்.
கடந்த முறை போட்டியிட்ட, ஆறு சட்டசபைத் தொகுதிகளிலிருந்து குறைத்து, மூன்று அல்லது நான்கு தொகுதி என்கிற அளவில் சுருக்கி, ம.தி.மு.க., என்ற கட்சியை அழிக்கும் வேலையை தி.மு.க., செய்கிறது. வைகோ தி.மு.க.,வோடு கூட்டணி வைத்ததன் காரணமாகத்தான், தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க., தப்பியது.
அதை தி.மு.க., மறந்து விட்டது. ம.தி.மு.க., என்ற கட்சி செயல்படுவதை, தி.மு.க., விரும்பவில்லை. எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., வெளியேற வேண்டும் என்பதே, உண்மையான ம.தி.மு.க., தொண்டர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
இனிமே வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன? It is time Vaikom calls it a day and retire gracefully from politics and start preaching christianity.
நிர்வாகிகளைப் பற்றியோ தொண்டர்களைப் பற்றியோ தற்சமயம் வைகோ கவலைப்படுவது கிடையாது. அவருடைய ஒரே கவலை மகனுக்கு பதவி வைகோவுக்கு பதவி இது ஒன்றுதான். இதற்காக திமுக தலைமை எந்த அளவுக்கு கீழே இறங்கி போக சொன்னாலும் போவார். ரோஷமெல்லாம் பார்க்க மாட்டார்.
திமுக கூட்டணி கட்சிகளின் நிலைமை பரிதாபம்தான். அதற்காக கிடைக்கும் வெகுமதியை அவ்வளவு எளிதில் விட்டு விட முடியுமா?
2016 சட்டசபை தேர்தலில் தனியாக நின்று 1 சதவீதம் ஓட்டு பெற்று மண்ணை கவ்வியது நினைவில் கொள்ளவும். எனவே கொடுத்த யாசகத்தை வாங்கிக்கொண்டு அடிமையாகவே தொடரவும். இல்லையேல் உம் கட்சி செல்லாக் காசு. கலைக்க வேண்டும்.
பாவம் மணிகண்டன் பெட்டி வாங்குவது மதிமுக வைகோ . அதை எப்படி நிறுத்தமுடியும் ? கட்சியை அழிப்பவரே வைகோதான் . திமுக இல்லை .
கொடுத்ததை வாங்கிக்கொண்டு ஓடி போய்டு உள்ளதும் போச்சே நொள்ளை கண்ணா என்ற கதை ஆகி விடும் உஷார் சைக்கோ
தனித்து போட்டி போட்டு 20 சதவீத வாக்கு வாங்காத காட்சிகள் கண்டிப்பாக கலைக்கப் பட வேண்டும் என் று சட்டம் கொண் டூ வர வேண்டும் . கட்ட பஞ்சாஸ்யது ஜாதியா காட்சிகள் ஒழிக்கப் பட வேண்டும்

கழுதை கெட்டால் குட்டிச் சுவருக்கு தான் வர முடியும்! வேறு எங்கும் போக முடியாது!