Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 '60 வயதாவதால் வாய்ப்பு கொடுங்கள்': தி.மு.க., நிர்வாகி உருக்கமான கடிதம்

 '60 வயதாவதால் வாய்ப்பு கொடுங்கள்': தி.மு.க., நிர்வாகி உருக்கமான கடிதம்

ஈரோடு: 'எனக்கு 60 வயதாவதால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தாருங்கள்' என, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., துணைச்செயலர் செந்தில்குமார், முகநுால் உட்பட சமூக வலைதளத்தில் கடிதம் வெளியிட்டுள்ளார்.

அவரது கடிதத்தில் கூறியதாவது: நான், 49 ஆண்டுகளாக, தி.மு.க.,வில் உள்ளேன். அதற்கு முன், என் தந்தையும் கட்சியில் இருந்துள்ளார். எனக்கு, 60 வயது. விருப்ப மனு போட்டு உள்ளேன். குறிப்பிட்ட சிலருக்கு அதுவே, என் கடைசி விருப்ப மனுவாக கூட இருக்கலாம். அடுத்த தேர்தலில், 65 வயதை கடந்து விட்டால், முதியவர் என வாய்ப்பு தராமல் விட்டுவிடக்கூடும்.

கடந்த 1991 முதல், ஏழு சட்டசபை, ஏழு லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கினேன். ஆனால், வாய்ப்பு வழங்கப்படவில்லை. வாய்ப்பு கிடைத்த சிலரை பார்க்கும்போது, அவர்களை விட நாம் என்ன தகுதி இல்லாமல் போய்விட்டோம் என்ற மனநிலையில் தவிக்கிறேன்.

தி.மு.க., வரலாற்றில் இதுவரை நடந்த சட்டசபைத் தேர்தல்களில் 2,505 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. அதில், 1,192 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், ஒன்றுக்கும் அதிகமான முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களே அதிகம். அப்படியென்றால், ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே திரும்பத் திரும்ப வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியென்றால், கட்சியில் நீண்ட காலமாக உழைக்கும் என் போன்றோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகத்தானே அர்த்தம். இப்படியாக தன் உள்ளக்குமுறலை கடிதத்தில் கொட்டி இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தி.மு.க.,வினர் கூறியதாவது: இவர், முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். ஈரோட்டில் முதலியார் சமூகத்தை சேர்ந்தோர் அதிகம் என்பதால், கடந்த 2021 மற்றும் அடுத்து நடந்த இரு இடைத்தேர்தல்களில், ஈரோடு கிழக்கில் வாய்ப்பு கோரி தீவிரமாக முயன்றார். அப்போதும் வாய்ப்பு தராததால், 'இனி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்க மாட்டேன்' என்று, தி.மு.க., தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தார். இப்போது மீண்டும் கடிதம் எழுதி இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மார் 10, 2026 01:04 pm

இதுதான் திராவிட மாடல் கட்சி. தொண்டர்களுக்கு கடிதம் மட்டுமே எழுதுவார்கள். பகல் கனவு காணாதீர்கள். பதவி கோபாலபுரத்துக்கே சொந்தம்.

Reply Rate this
மார் 05, 2026 04:51 pm

ஒன்று நீங்கள் தலைமை குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக காம தேனுவாக இருக்க வேண்டும் அல்லது அதிமுக வில் இருந்து வந்தவராக இருக்க வேண்டும். இது எதுவுமில்லாமல் வெறும் போஸ்டர் ஒட்டியதை மட்டுமே தகுதியாகக் காட்டி சீட்டுக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும்?. ஒரு குடும்பத்தின் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு உரிமைக்குரல் எழுப்புவது கம்பெனி சட்டத்துக்கு விரோதமானது.

Reply Rate this
மார் 05, 2026 01:48 pm

போஸ்டர்ஓட்டுவதும் தான் உன் வேலை. மேலே போக ஆசை படக்கூடாது. மேலே போவதற்கு சிறு பான்மையினார் ஆக இருக்க வேண்டும். அல்லது ஒரு சில குடும்பத்தின் வாரிசாக இருக்க வேண்டும்.

Reply Rate this
மார் 04, 2026 06:03 pm

வயது 60 ஆனால் போதுமா அதர்கு ஏற்ற முதிர்ச்சி சிறிதும் இல்லாதவர்கள் தான் திமுக விசுவாசிக்கு அடிப்படை தகுதி என்பது திரையின் பின்னால் உள்ள குடும்ப விதி ... இது தெரியாததால் தான் இவர் திமுகவில் இருக்கிறார் ஏன் திமுக தொண்டர்கள் கூட கொத்தடிமை மட்டுமே தகுதி பதவி பிற கட்சி இல் இருந்து வந்தால் மட்டுமே..
ரஜ்ய சபா வேட்பாளர் கூட இந்த முறை இரண்டு பேர் தேமுதிக என்றூதான் நேற்று முடி வு செய்து உள்ளார்கள் ஒருவர் முந்நாள் தேமுதிக புரசை தொகுதியில் போட்டி இட்ட எம்பி வேட்பளர் மற்ரவர் பிரேம லதா சகோதரர் சுதிஷ்
வரலாறூ கூட அதை தான் நிரூபிக்கிறது அமைச்சர்கள் முத்து சாமி,, செகர் பாஅபு, ராஜ கண்னப்பன். செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்னன், செல்வகணபதி, சாத்தூர் ராமச்சந்திரன், ஜகத்லரட்சகன், ரகுபதி, எ.வ.வேலு இவர்கள் அனைவரும் அதிமுக முன்நாள் என்கிற ஒரே அடிப்படை தகுதிக்கு மட்டுமே...
மேலும் பல் எம் எல் ஏ எம்பி க்கள் அமைச்சர் ஆக காத்திருக்கும் பட்டியலில் அன்வர் ராஜா, பழனி அப்பன், தங்க தமிழ் செல்வன், லட்சுமணன், மனோஜ் பாண்டியன் ஆறுகுட்டி, மைத்ரேயன், வைத்தியலிங்கம், நிலோபர் கபில் மற்றும் சமீபத்தில் தாய் கிழவி இடம் அண்டி யுள்ள ஓபிஏஸ் எனும் "ஓ பன்னீர் செல்வமாகிய நான்"
போதுமா இன்னும் வேண்டுமா..... திவிட கித்தடிமை உடன் பிறப்புகளே... நீங்கள் இது போன்ற ஆசையுடன் கழகத்தில் இருக்காமல் முற்றும் துறந்த முனிவராக "ஒன்றீணைவோம் வெல்வோம்" கோஷத்துடன் வாக்களியுங்கள்... அது தான் உங்கள் தலையாய வேலை முக்கியமாக கடமை

Reply Rate this
மார் 04, 2026 07:24 am

முதலியாரெல்லாம் முக்கியமில்லை முதல்ல யார் என்பதே முக்கியம் முதலீடு தேவை

Reply Rate this
மார் 04, 2026 06:24 am

திராவிட மாடல் விஞ்ஞானரீதியான ஊழல்வாத சக்கரவர்த்திகளை போல இவரும் தன்னுடைய பங்குக்கு ஏதாவது சம்பாதிக்க ஆசைப்படுகிறார் . நேற்று வந்த செந்தில் பாலாஜிக்கு கொடுத்த மாதிரி பரம்பரை கொத்தடிமையாக இருக்கும் இவரை போன்ற ஆட்களுக்கும் வாய்ப்பு கொடுங்க

Reply Rate this
மார் 04, 2026 06:15 am

ஆக, தி.மு.க. வில் தொண்டன் வெறும் டீ மட்டும் குடித்துவிட்டு போஸ்டர் ஒட்டுவான். ஒரு சிலர் அல்லது அவர்கள் வாரிசுகள் மட்டும் பலனை அனுபவிப்பர். அவர்களை இவர்கள் பரம்பரை பரம்பரையாக, பல்லக்கில் வைத்து சுமப்பர். இதானே உலக வழக்கம்.

Reply Rate this