5 ஆண்டு ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி ஊழல்
சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பணி ஒப்பந்தங்களை வழங்குவதில், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே ஒப்பந்தம் என்ற 'சிஸ்டத்தை' தி.மு.க., அரசும், சென்னை மாநகராட்சியும் உருவாக்கியுள்ளன. கடந்த 2024ல் வழங்கிய ஒப்பந்தங்கள், மாநகராட்சி நிர்ணயித்ததை விட, 12.51 சதவீதம் வரை கூடுதல் தொகைக்கு வழங்கப்பட்டுள்ளன. ஊழலை ஒழிக்க கொண்டு வரப்பட்ட, 'இ - டெண்டர்' முறையிலும் தி.மு.க., ஊழல் செய்துள்ளது.
ஆற்று மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை, பணி நியமன ஊழல், மதுபான வரி ஏய்ப்பு என, ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, சட்டத்தின் பிடியிலிருந்து வேண்டுமானால் ஊழல் தி.மு.க., தப்பிக்கலாம். தேர்தலில், மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்